தூய வெள்ளை நிறமாக இருந்தால் தான் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட முடியும்.. கவாஜா தாக்கு

தூய வெள்ளை நிறமாக இருந்தால் தான் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட முடியும்.. கவாஜா தாக்கு

ஆஸ்திரேலியாவில் எப்போதுமே நிறவெறி என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். ஆசிய கண்டத்தில் இருந்து ஏதேனும் வீரர்கள் அங்கு விளையாட சென்றால் நிறவெறி தொடர்பான கருத்துக்கு ஆளாக்கப்படுவார்கள். இந்த நிலையில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த உஸ்மான் கவாஜா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த 2010 -11 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணிக்காக கவாஜா விளையாடினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற முதல் இஸ்லாமியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. இந்த நிலையில் உஸ்மான் கவஜாவுக்கு பல நெருக்கடிகள் அணியில் ஏற்படுவதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் நேர்காணலில் பேசிய உஸ்மான் கவாஜா, நான் தூய வெள்ளை நிறத்தில் இருக்க ஆசைப்படுகிறேன். ஏனென்றால் அப்போதுதான் ஆஸ்திரேலியா அணிக்காக உங்களால் விளையாட முடியும்.நியூயார்க்கில் நடைபெற்ற செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு பல விஷயங்கள் மாறிவிட்டது. நான் பல விஷயங்களைப் பார்த்து அனுபவித்து ஆஸ்திரேலியாவில் வளர நேரிட்டது.

கிரிக்கெட் பொருத்தவரை நான் ஆஸ்திரேலியா அணிக்காக பல ஆண்டுகள் விளையாடிவிட்டேன். மக்கள் என்னை ஒரு கிரிக்கெட் வீரராக தான் பார்ப்பார்கள். நான் ஆஸ்திரேலியாவை நேசிக்க பல காரணம் இருக்கின்றது. நான் நேசித்ததை அனுபவித்ததை மற்றவர்களும் பெற வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். ஒரு விஷயம் புரியவில்லை என்றால் அதைப் பார்த்து மக்கள் அச்சப்படுவார்கள்.

ஆனால் நீங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் ஒரு சாதாரண மனிதன். நான் எங்கிருந்து வந்தேன்! நான் எதை நம்புகிறேன் என்பதெல்லாம் இங்கு முக்கியம் கிடையாது. சிலர் ஆஸ்திரேலியாவில் வெறுப்பை விதைக்கிறார்கள்.ஆஸ்திரேலிய மக்களை நிறத்தால் பின்புலதால் பிளவுபடுத்த நினைக்கிறார்கள்.

இப்படிப்பட்ட விஷயத்திற்கு எதிராக நான் நிற்க வேண்டும் என நினைக்கின்றேன். குரல் இல்லாதவர்களுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். நான் ஒரு விஷயத்தை எதிர்த்து நிற்கவில்லை என்றால் வேறு யாரு தான் நிற்பார் என்று உஸ்மான் கவாஜா கூறியுள்ளார். ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி அடுத்ததாக இந்தியாவுக்கு எதிராக வரும் நவம்பர் 22ஆம் தேதி விளையாட இருக்கிறது இதில் உஸ்மான் கவஜா இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.