தென்னாபிரிக்க மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து..!

தென்னாபிரிக்க அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் வெற்றியை நியூசிலாந்து அணி இன்று (16) பதிவு செய்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 என கைப்பற்றியது.

ஹாமில்டனில் இன்று முடிவடைந்த இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது.

267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கும் போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை கடந்தது.

கேப்டன் கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 133 ரன்களும், வில் யங் ஆட்டமிழக்காமல் 60 ரன்களும் குவித்து தனது அணியை வரலாற்றுத் தொடர் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 242 பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 211 க்கு மட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்சில் 235 ரன்கள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.