தென்னாப்பிரிக்க ஆண்கள் தேர்வுக் குழு, பாகிஸ்தானக்கு எதிராக அடுத்து வரவிருக்கும் அனைத்து வடிவ சுற்றுப்பயணத்திற்கும், நமீபியாவுக்கு எதிரான ஒரே ஒரு டி20 சர்வதேச போட்டிக்கும் அணிகளை அறிவித்துள்ளது.
அக்டோபர் 12 முதல் 24 வரை லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் SA அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை தொடங்கும்.
டெஸ்ட் கேப்டன் டெம்பா பவுமா சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பிலிருந்து மீண்டு வருவதால், அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவர் இல்லாத நிலையில், ஐடன் மார்க்ராம் அணியை வழிநடத்துவார்.
#Cricket #Southafrica