தென் ஆபிரிக்க T20 லீக்- அதிக தொகைப் பிரிவில் சாமிக..!

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் நடத்தும் முக்கிய டுவென்டி 20 கிரிக்கெட் லீக் SA20 அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது.

இந்த நாட்களில், இந்த போட்டியின் வீரர்கள் ஏலத்தை குறிவைத்து வீரர்களின் பெயர்கள் பெரிய அளவில் உள்ளிடப்படுகின்றன.

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் சாமிக்க கருணாரத்ன இந்த ஏலத்தின் அதிக பெறுமதி கொண்ட பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சமிக்காவின் பெறுமதி  அண்ணளவாக 36 மில்லியன் இலங்கை ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அந்த வகையில் பெயரிடப்பட்டுள்ள ஒரே ஆசிய வீரர் சமிக கருணாரத்ன மட்டுமே, இதில் ஜேசன் ராய், இயோன் மோர்கன், அடில் ரஷித், ஜிம்மி நீஷம், ஓடன் ஸ்மித், ஜேடன் சீல்ஸ் மற்றும் டைமல் மில்ஸ் ஆகியோர் அடங்குவர்.

IPL அணிகளின் உரமையாளர்கள் பலர் இந்த அணிகளை கொள்முதல் செய்துள்ள நிலையில் இந்த தொடர் அதிகம் எதிர்பார்கப்படுகிறது.

எமது YouTube தளத்துக்கு பிரவேசியுங்கள் ?

 

 

 

 

Previous articleஇலங்கையின் உலக கிண்ண அணி தேர்வு -விளையாட்டுத் துறை அமைச்சர் விபரம்..!
Next articleசாம்பியன் மகுடம் சூடியது இந்தியா..!