தேசிய தொழில்நுட்ப உத்தியோத்தர்களுக்கான அனுமதிப்பத்திர பரீட்சையில் சித்திபெற்ற திருமலை அசோக்..!

திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த இ.அசோக் அவர்கள் இலங்கை தடகள விளையாட்டுக்கள் சம்மேளத்தினால் (Srilankan Athletics) வழங்கப்படும் தேசிய தொழில்நுட்ப உத்தியோத்தர்களுக்கான அனுமதிப்பத்திர பரீட்சையில் சித்திபெற்று அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டார். (NTO’S licence)

இச்சான்றிதழையும் அனுமதிப்பத்திரத்தையும் பெறுவதற்கு நான்கு மட்டம் (level) பரீட்சைகளில் (எழுத்து,வாய்மூலம்,செய்முறை) (level 4, level 3 ,level 2 ,level 1) சித்தயடைந்திருத்தல் வேண்டும் . level 1 இறுதிப் பரீட்சை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நடைபெறும் (level 2 சித்தியடைந்தவர் களில் 20 பேர் புள்ளி அடிப்படையில்)
கிழக்கு மாகாணத்திலே இவ்வனுமதிப்பத்திரத்தைப் பெற்றவர்கள் ஒருசிலரே.

அதில் முதன்மை யானவர் திரு.விஜய நீதன் (ஒய்வுபெற்ற மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்) அவர்கள்.

 

திரு அசோக் அவர்கள் திருகோணமலை பெருந்தெரு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம், தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் பழைய மாணவரும், தற்போது சிரேஸ்ட பாமஸிஸ்ட் ஆக திருகோணமலை தள வைத்தியசாலையில் கடைமைபுரிந்து வருகிறார்.

இவர் பாடசாலைக்காலம் முதல்ஒரு சிறந்த தடகளவீரராக 100மீற்றர், 200மீற்றர், நீளம் பாய்தல், உயரம் பாய்தல், 110மீற்றர் தடைதாண்டல் போட்டிகளில் சிறந்து விளங்கினார் இவர் வடக்கு கிழக்கு மாகாண 110மீற்றர் தடைதாண்டல் போட்டியில் முன்னால் சாதனையாளருமாவார்.
அத்துடன் பல தடவைகள் தேசிய விளையாட்டு போட்டியில் வடக்கு கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்திய வீரராவார்.

இவரது பயிற்றுவிப்புக்களை பாடசாலை காலத்தில் ஈஸ்வரதாசன் ஆசிரியர், பசீர் ஹமீட் ஆசிரியரும் அதன் பின்னர் இவரை சிறப்பான ஒரு வீரராக மாற்றிய பெருமை முன்னால் மாவட்ட விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் திரு.எஸ். விஜயநீதனை சேரும்.

இவரே இவரை போன்றவர்களை இத்துறையில் ஆரம்ப காலம் முதல் பயிற்றுவித்து பரீட்சைகளில் பங்குபற்ற வைத்து முன்னோடியாக வழிநடத்திக்கொண்டு இப்போதுவரை திகழ்கிறார்.

அசோக் பிரபல இலக்கிய ஆளுமை என்பதுடன் ஏராளம் , சிறுகதை , நாவல் தொகுப்புக்களையும் கழுதி வெளியிட்டுள்ளார்.

மேலும் இத்துறையில் அசோக் அவர்கள் சாதனை படைக்க அவரை திருக்கோணேச பெருமானின் அருளாசி வேண்டி வாழ்த்துகிறோம்.

Trinconet