பங்களாதேஷ் அணியின் முன்னாள் வீரரான அப்துர் ரசாக் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
38 வயதான இவர், பங்களாதேஷ் அணிக்காக 13 டெஸ்ட், 153 ஒருநாள் போட்டிகள், 34 இருபதுக்கு இருப்பது போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
முன்னாள் தலைவரான மின்ஹாஜுல் ஆப்தீன் தலைமையில் செயல்படும் பங்களாதேஷ் தேர்வுக்கு குழுவில், 200 க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட அப்த்துர் ரசாக், ஹபீபுல் பஸார் ஆகிய முன்னாள் வீரர்கள் அங்கம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அப்த்துல் ரசாக் 2018 ஆண்டுக்கு பின்னர் பங்களாதேஷ் அணியில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.