தோனிக்கு நிகரான சாதனை புரிந்து அசத்திய ராகுல் திவாட்டியா – குஜராத் ஹாட்ரிக் வெற்றி…!

தோனிக்கு நிகரான சாதனை புரிந்து அசத்திய ராகுல் திவாட்டியா – குஜராத் ஹாட்ரிக் வெற்றி…!

15வது ஐபிஎல் தொடரின் 15 வது போட்டி இன்று நிறைவுக்கு வந்துள்ளது, பாண்டியா தலைமையிலான குஜராத், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் போட்டியில் பங்கேற்றன.

முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை பெற்றது, லிவிங்ஸ்டன் அதிரடியாக 4 சிக்சர்கள் அடங்கலாக அரை சதம் அடித்து அசத்தினார்.


பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதி 3 ஓவர்களில் 37 ஓட்டங்கள் தேவை என்கின்ற நிலைமை உருவானது, 18-வது ஓவரை வீசிய ஆர்ஷ்தீப் சிங் 5 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார், அதில் 19-வது ஓவரை வீசிய ரபாடா அந்த ஓவரில் 13 ஓட்டங்களை மட்டுமே கொடுக்க இறுதி ஓவரில் குஜராத்துக்கு 19 ஓட்டங்கள் தேவையாக இருந்தது.

அந்த நேரத்தில் இறுதி இரண்டு பந்துகளில் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவையாக இருந்தபோது இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு மாற்றிய திவாட்டியா ஓர் அசத்தலான வெற்றியை குஜராத் அணிக்குப் பெற்றுக்கொடுத்தார்.

இந்த மாதிரி இறுதி இரண்டு பந்துகளில் இரண்டு சிக்சர்கள் அடித்து வெற்றி பெறவேண்டிய நிலை இருந்தபோது, சென்னையின

ஜடேஜா 2016 ஆம் ஆண்டிலும், தோனி 2020 ஆம் ஆண்டிலும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.இந்தச் சாதனையாளர்கள் வரிசையில் இப்போது ராகுல் திவாட்டியா இடம்பிடித்துள்ளார்.

இது மாத்திரமல்லாமல் IPL ல் அறிமுகமான குஜராத் அணி விளையாடிய மூன்று ஆட்டங்களில் மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் திகழ்கிறது.