தோனியின் ஆதரவாளர்கள் இந்திய அணியில் அடியோடு நீக்கம்.. வேலையை காட்டிய கம்பீர்

தோனியின் ஆதரவாளர்கள் இந்திய அணியில் அடியோடு நீக்கம்.. வேலையை காட்டிய கம்பீர்

இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் தோனியின் ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் வந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

கௌதம் கம்பீருக்கும், தோனிக்கும் உள்ள பிரச்சனை ஊர் அறிந்த விஷயம். எனினும் கடந்த சில மாதங்களாக தோனியை புகழ்ந்து பேசி வந்த கம்பீர் மற்ற வீரர்கள் மீது குறை கூறும் பழக்கத்தையும் கைவிட்டு இருந்தார். இதனால் கம்பீர் திருந்தி விட்டதாக அனைவரும் எதிர்பார்த்தனர்.

இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் தோனியின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு இருக்கும் எந்த ஒரு வீரரும் சேர்க்கப்படவில்லை. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் அபாரமாக செயல்பட்ட சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.

இதேபோன்று ஒரு நாள் போட்டியில் ஒரு கூடுதல் வீரராக கூட ருதுராஜ் இந்திய அணியில் சேர்க்கவில்லை. இதேபோன்று டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஒரு நாள் அணியில் சேர்க்கப்பட்ட நிலையில் ஜடேஜா மற்றும் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். ஜடேஜா தோனியின் நண்பர் என்று ஊர் அறிந்த விஷயம்.

இதேபோன்று பிசிசிஐ ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து அண்மையில் அதிரடியாக நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் தற்போது ஒரு நாள் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.ஆனால் ஸ்ரேயாஸ் ஐருடன் நீக்கப்பட்ட இஷான் கிசனுக்கு t20 ,ஒருநாள் என இரண்டு போட்டிகளுமே இடம் கிடைக்கவில்லை. இசான் கிஷனுக்கு சொந்த ஊர் ஜார்கண்ட். தோனி ஹர்திக் பாண்டியா உடன் எப்போதுமே பார்ட்டியில் ஈடுபடுவார்.

தோனியிடம் நட்பாகவும் இவர் இருந்து வந்திருக்கிறார். இதனால் இந்த மூன்று வீரர்களுமே நீக்கப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் ஒருநாள் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா ஓய்வு வேண்டும் என கூறியிருப்பதால் ஆல் ரவுண்டர் இடத்திற்கு ஆள் இல்லை என்பதால் சிவம் துபே மட்டும் சேர்க்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் புகார் கூறுகின்றனர்.