தோனியின் சம்பளத்தில் கைவைத்த சஞ்சீவ் குப்தா- நெத்தியடி முடிவை அறிவித்த BCCI ,
2021 ஐசிசி ஆண்கள் டி 20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் வழிகாட்டியாக எம்எஸ் தோனியின் நியமனம் பலருக்கு ஒரு நல்ல செய்தியாக இருந்திருக்கலாம், ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) க்கு இந்த நியமனம் தலையிடியாக சிக்கலை தோற்றுவித்தது.
இந்த நடவடிக்கை லோதா கமிட்டி சீர்திருத்தங்களின்படி சிக்கலுக்குரிய நியமனமாக வருகிறது. இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டனாக இருக்கும் தோனி, உலக கிண்ண நிகழ்வில் இந்திய வீரர்களுக்கு வழிகாட்டும் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.
இதனால் ஒட்டுமொத்தமான தோனி ரசிகர்கள் மட்டுமல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் இங்கேதான் சர்ச்சையும் சிக்கலும் உருவானது.
முன்னாள் மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்க வாழ்நாள் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா, முன்பு வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது தொடர்ச்சியான புகார்களைத் தாக்கல் செய்துள்ளார், தோனியை வழிகாட்டியாக நியமிக்க முடியுமா, ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டும் ஏன் நியமிக்கப்படுகிறார்கள் என்று கேட்டு பிசிசிஐ உயரதிகாரிகளுக்கு ஒரு புதிய கடிதம் எழுதி தோனிக்கான இந்த சிக்கலை தோற்றுவித்தார்,
“பிசிசிஐ / மாநில கிரிக்கெட் சங்கங்கள் / ஐபிஎல் உரிமையாளர்கள் ஏன் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற வீரரை / கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற்ற வீரர்களை மட்டும் அணி அதிகாரியாக / துணை ஊழியர்களாக நியமிக்கிறார்கள்?” குப்தா ஒரு கடிதத்தில் கேள்விக்கணை தொடுத்தார் , அங்கு அவர் பத்து கேள்விகளை எழுப்பினார்.
ஐபிஎல் அணியின் கேப்டனாக இருக்கும் வீரர்களுக்கு இரட்டை வேடம் (Dual Role) கொடுக்க முடியுமா என்று குப்தா கேட்டார்.
உண்மையில் இந்திய கிரிக்கெட் சபை சார்ந்த அமைப்பில் இருவேறு பதவிகளில் ஒருவர் சமகாலத்தில் இருந்து ஊதியம் பெறமுடியாது என உள்ளக கிரிக்கெட் சட்டம் இருக்கிறது.
இதனால் டோனியின் நியமனம் கேள்விக்குரியதாகவும் அதனை முன்கொண்டு செல்வதிலும் சர்சைகளும் சிக்கல்களும் உருவாகியிருந்தன.
அதனை நாசுக்காக கையாண்டிருந்த இந்திய கிரிக்கெட் சபை , இப்போது தோனி சம்பளம் பெறாத ஊழியராக தனது பங்களிப்பை வழங்குவார் என அறிவித்து பிரச்சனையை முடித்து வைத்திருக்கிறது.
நாங்கள் ஒன்றை நினைத்தால் தோனி இன்னுமொன்றை நினைப்பார் என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது.
இந்த சர்சைகளின் பின்னால் தோனி சம்பளம் பெறாத ஊழியராக செயல்படுவார் என BCCI செயலாளர் ஜெய் ஷா இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.