தோனியின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா..!

பிப்ரவரி 5 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 106 ரன்கள் வித்தியாசத்தில் தனது நாட்டை வழிநடத்தியதன் மூலம், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஓர் சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 469 போட்டிகளில் பங்குபற்றி 296 வெற்றிகளை குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் ரோஹித் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தோனி இந்தியாவுக்காக விளையாடிய 535 போட்டிகளில் 295 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 522 போட்டிகளில் 313 வெற்றிகளுடன் முதலிடத்திலும், புகழ்பெற்ற சச்சின் டெண்டுல்கர் 664 போட்டிகளில் நாட்டிற்காக விளையாடி 307 வெற்றிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

யுவராஜ் சிங் இந்தியாவுக்காக விளையாடிய 399 ஆட்டங்களில் 227 போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் டாப்-5 பட்டியல் இடம்பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரரின் அதிக வெற்றிகள்:

விராட் கோலி – 313
சச்சின் டெண்டுல்கர் – 307
ரோஹித் சர்மா – 296*
எம்எஸ் தோனி – 295
யுவராஜ் சிங் – 227

 

 

Previous articleடெஸ்ட் கிரிக்கெட் வித்தியாசமானது- இரட்டைச்சத நாயகன் ஜெய்ஸ்வால்..!
Next articleஇஷான் கிஷானை அணியில் சேர்க்காதது ஏன் – டிராவிட் விளக்கம்..!