தோனியின் டி20 உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான சாதனையை முறியடித்த சொயிப் மாலிக்..!

தோனியின் டி20 உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான சாதனையை முறியடித்த சொயிப் மாலிக்..!

நேற்றைய (26) நாளில் இடம்பெற்ற பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான T20 உலக கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் அணி மிகச்சிறந்த வகையில் 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர், பாகிஸ்தான் அணியின் அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரரான மாலிக் ,மிகச்சிறப்பாக 25 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டு பாகிஸ்தான் அணியின் வெற்றியை உறுதி படுத்தினார் .

டி20 உலகக்கிண்ணப் போட்டிகளில் 2007ஆம் ஆண்டு முதலாவது உலகக் கிண்ண போட்டியில் தொடக்கம் இப்போது வரைக்கும் விளையாடும் வீரர்களில் ஒருவரான சொயிப் மாலிக், நேற்று புதிய சாதனையை நிலைநாட்டினார்.

 டுவென்டி டுவென்டி உலகக்கிண்ண போட்டிகளில் அதிக தடவைகள் சேசிங்கின் போது ஆட்டமிழக்காது இருந்தவர்கள் வரிசையில் இப்போது முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

இதுவரைக்கும் தோனி T20 உலக கிண்ணப் போட்டிகளில் 20 தடவைகள் ஆட்டமிழக்காத ஆட்டக்காரராக இருந்தார்.ஆனால் நேற்று சொயிப் மாலிக் ஆட்டமிழக்காமல் ஆடியது  21 வதெ சந்தர்பமாக மாறியுள்ளது.

ஆக மொத்தத்தில் தோனியின் உலகக்கிண்ண போட்டிகளுக்கான சாதனையை சொயிப் மாலிக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.