தோனியின் புதிய IPL சாதனை -கெத்துக்காட்டிய தல…!

தோனியின் புதிய IPL சாதனை -கெத்துக்காட்டிய தல…!

MS தோனி ஐபிஎல் 2022 இன் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக சென்னை சூப்பர் போராடிய நிலையில், முன்னாள் கேப்டன் தோனி சிறப்பாக ஆடினார்.

அவர் 38 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு பெரிய சிக்சருடன் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்தார். ராபின் உத்தப்பா (28), ரவீந்திர ஜடேஜா (26 நாட் அவுட்) ஆகியோரும் பேட்டிங்கில் பங்களித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நடப்பு சாம்பியன் சென்னை 131/5 குவித்தது.

இதற்கிடையில், 40 வயதான தோனி, அதிக தடவை 50 ரன்கள் பெற்று ஆட்டமிழக்காதவர்களின் பட்டியலில் ஷிகர் தவானை முந்தினார்.

ஷிகர் தவான் 19 தடவை 50* பெற்றிருந்தாலும், சிஎஸ்கேயின் மூத்த வீரர் இன்றைய ஆட்டத்தின் மூலம் 20வது ஆட்டம் இழக்காத 50 அடித்தார்.

இந்த பட்டியலில் 23 தடவைகள் சாதனை படைத்த முன்னாள் ஆர்சிபி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

முதலாவது போட்டியில் கொல்கத்தா அணி 9 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட்டுகளால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்தது.