தோனி தொடர்பில் ஸ்ரீனிவாசன் விடெத்த அதிரடி அறிவிப்பு என்ன தெரியுமா – ஆச்சரியப்படும் ரசிகர்கள்..!

CSK உரிமையாளர் N சீனிவாசன் MS தோனி இல்லாமல் CSK இல்லை, CSK இல்லாமல் தோனி இல்லை என்று கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு தோனி சிஎஸ்கேவில் இருப்பாரா இல்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த சீனிவாசன், கடந்த வெள்ளிக்கிழமை எம்எஸ் தோனி தலைமையில் சிஎஸ்கே 4 வது ஐபிஎல் பட்டத்தை வென்றது, ஆனால் போட்டி முடிந்தவுடன், தோனி தொடர்பில் மீண்டும் நிறைய கேள்விகள் எழுந்தன.

CSK க்காக தொடர்ந்து விளையாடுவாரா என்பதே பலரது கேள்வியாகும்,  இந்த கேள்விகளுக்கு பின்னால் ஒரு மெகா ஏலம் வருவது மற்றும் அதைவிடவும் உரிமையாளர்கள் 2 அல்லது 3 வீரர்களை மட்டுமே தக்கவைத்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்பதுவுமே காரணமாகும்.

எனவே, சிஎஸ்கே தக்கவைப்பது பற்றி சிஎஸ்கே சிந்திக்க வேண்டும் அல்லது அடுத்த 3-4 ஆண்டுகளுக்கு உரிமையாளர்களுக்கு சேவை செய்யக்கூடிய வீரர்களை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதே எல்லோரது அவாவுமாகும்..

இதனாலேயே தோனி தோனி தொடர்பில்  இயல்பாகவே மக்களை இந்த கேள்வியை கேட்க வைக்கிறது. பிசிசிஐ மூலம் தக்கவைத்தல் கொள்கை (Retaining) இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

எம்எஸ் தோனி இந்த கட்டத்தில் தக்கவைத்தல் குறித்து நிச்சயமற்ற நிலை உள்ளது என்பதை ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார். பிசிசிஐ எத்தனை வீரர்களை உரிமையாளர்களை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கும் என்று அறிவித்த பின்னரே தன்னால் முடிவு எடுக்க முடியும் எனவும் அதற்கு முன், தக்கவைத்தல் பற்றி எல்லாம் நிச்சயமற்றது எனவும் தோனி குறிப்பிட்டார்.

ஸ்ரீனிவாசன் வெங்கடேஸ்வரா கோவிலில் தனது மகள் ரூபா குருநாத்துடன் இருந்தார், அங்கு அவர் ஐபிஎல் கோப்பையுடன் ஒரு சடங்கை செய்தார். இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் அங்கு வந்த செய்தியாளர்களிடம் இருந்து சில கேள்விகளை எதிர்கொண்டார்.

 தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை, சிஎஸ்கே இல்லாமல் தோனி இல்லை, ”என்று சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஆகவே தோனி சென்னை அணியில் தக்க வைக்கப்படுவதும் அடுத்த ஆண்டு விளையாடுவதும் உறுதியாக நம்புவோம்.