தோனி பேட்டிங் ஆடுவதே இதற்குத் தான்.. வெற்றி பற்றி கவலை இல்லை.. வீரேந்தர் சேவாக் ஓபன் டாக்

தோனி பேட்டிங் ஆடுவதே இதற்குத் தான்.. வெற்றி பற்றி கவலை இல்லை.. வீரேந்தர் சேவாக் ஓபன் டாக்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறார். எனினும், அவர் பேட்டிங் வரிசையில் எட்டு அல்லது ஒன்பதாவது இடத்தில் களமிறங்கி வருவது விவாதத்துக்கு உரிய விஷயமாக மாறி இருக்கிறது.

அது குறித்து முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் அதிரடியாக சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். தோனி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் ரசிகர்களை மகிழ்விக்கிறார். வெற்றி தோல்வி பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை என வெளிப்படையாக பேசியிருக்கிறார் சேவாக்.

2023 ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெற இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர் சிஎஸ்கே அணியின் ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கடைசி சில ஓவர்கள் மட்டும் பேட்டிங் செய்து வருகிறார். அவருக்கு காலில் காயம் இருப்பதால் ரன் ஓடுவதில் சிரமம் உள்ளது. எனவே ஃபோர் மற்றும் சிக்ஸ் அடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதனால்யே தோனியின் ஸ்ட்ரைக் ரேட் மிக அதிகமாக உள்ளது.

இது பற்றி வீரேந்தர் சேவாக் பேசுகையில், “தோனியின் பேட்டிங் வரிசை குறித்த விவாதத்தை நாம் முடித்துக் கொள்ள வேண்டும். அவர் என்ன செய்கிறார் என அவருக்கு தெரியும். அது அவருடைய விருப்பம். நீங்கள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால், அவர் இருக்கும் ஃபார்முக்கு, அவர் வைத்திருக்கும் ஸ்ட்ரைக் ரேட்டுக்கு, அவர் செய்யும் பேட்டிங்கிற்கு இணையாக மற்ற சிஎஸ்கே பேட்ஸ்மேன்களும் விளையாட வேண்டும். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் டேரில் மிட்செல் மற்றும் மொயீன் அலி, சுதர்சன் மற்றும் கில் ஆட்டத்துக்கு இணையாக ஆடவில்லை. யாராவது ஒருவர் சதம் அடித்திருக்க வேண்டும். அதேபோல ஜடேஜா அல்லது சிவம் துபே 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தால் இலக்கை நெருங்கி இருக்கலாம்.” என்றார் சேவாக்.

மேலும், “தோனியின் பேட்டிங் வரிசை பற்றி நான் விவாதிக்க மாட்டேன். அவர் எங்கு பேட்டிங் செய்தாலும் எனக்கு கவலை இல்லை. அவர் நன்றாக பேட்டிங் செய்கிறார். ரசிகர்களை மகிழ்விக்கிறார். சிஎஸ்கே வெற்றி பெற்றால் என்ன? தோல்வி அடைந்தால் அவர்களுக்கு என்ன?. அவர் ரசிகர்களை மகிழ்விக்கிறார். அவ்வளவுதான்.” என்றார் சேவாக்.