நாட்டைக்காக்க ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிதியுதவி..!

 

அத்தியாவசிய மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக நாட்டின் சுகாதாரத் துறைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்றுக் குழு நேற்று கூடிய போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  ஶ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.

அத்துடன், தேசிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.

மேலும், குறித்த நிதியுதவியின் அவசரத் தன்மை கருதி நன்கொடைக்கான நிதியை உடனடியாக விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போதைய நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கு அவசியமான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

Capital News