நான்கு முறை கிராண்ட் பிரிக்ஸ் உலக சம்பியனான செபஸ்டியன் வெட்டல் குப்பை அள்ளும் காட்சிகள் …!

நான்கு முறை கிராண்ட் பிரிக்ஸ் உலக சம்பியனான செபஸ்டியன் வெட்டல் குப்பை அள்ளும் காட்சிகள் …!

கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் நான்கு முறை உலக சாம்பியனான செபஸ்டியன் வெட்டல் குப்பை அள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

SEBASTIAN VETTEL

பிரிட்டன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தய போட்டிகளின் நிறைவுக்குப் பின்னர் இந்த சம்பவம் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சில்வர்ஸ்டோன் இல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த பந்தயத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து போட்டியை கண்டு ரசித்ததாக அறியப்படுகிறது.

போட்டிக்கு பின்னர், நான்கு முறை உலக சாம்பியனான  செபஸ்டியன் வெட்டல் அங்கு இருந்த குப்பைகளை அள்ளி அப்புறப்படுத்தும் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வருடத்திற்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான சம்பாத்தியத்தை கொண்டிருக்கும் ஒரு கார் பந்தய வீரரினர  பவ்வியமான இந்த செயற்பாடு ரசிகர்களை நெகிழவைத்தது.

தன்னடக்கத்தோடு பணிவோடு சமூகத்தை மதிக்கும் தன்மை சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசவைத்திருக்கிறது.

சிறிது பணம் வந்தால் தலைகால் புரியாமல் ஆடும் சமூகத்துக்கு மத்தியில், வருடத்திற்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக சம்பாதிக்கும் முன்னாள் உலக சாம்பியன் ஒருவரின் செயல் மிகப்பெரிய உதாரணமே.

Twitter வாசிகள் அதிகமானவர்கள் இவருடைய செயலை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.