நான் செஞ்சது தப்பு தான்… ஆனால் எங்களுக்கு நடந்தது பெரிய அநீதி; ரிஷப் பண்ட்
அம்பயர்களுடன் விவாதிக்க டெல்லி அணியின் பயிற்சியாளரான பிரவீன் ஆம்ரேவை களத்திற்குள் அனுப்பியது தவறு தான் என டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த போட்டியின் கடைசி ஓவரின் மூன்றாவது பந்தை, ஓபட் மெக்காய் புல் டாஸாக வீசினார், இது பேட்ஸ்மேனின் இடுப்புக்கு மேலே சென்றது தெளிவாக தெரிந்த போதிலும், அம்பயர் அதற்கு நோ – பால் கொடுக்கவில்லை, இதனால் கடுப்பான டெல்லி வீரர்கள் ஆடுகளத்திற்கு வெளியே இருந்து நோ – பால் கொடுக்க வேண்டும் என கூச்சலிட்டனர்.
இதில் கேப்டனான ரிஷப் பண்ட் ஒரு படி மேலே சென்று ஆடுகளத்தில் இருந்த தனது வீரர்களை வெளியே வருமாறு அழைப்பு கொடுத்தார், போதாக்குறைக்கு டெல்லி அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான பிரவீன் ஆம்ரேவை களத்திற்குள் அனுப்பி அம்பயர்களிடம் விவாதிக்க வைத்தார்.
ரிஷப் பண்ட்டின் இந்த செயல் அவர் மீது கடும் விமர்ச்சனங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தான் அப்படீ செய்தது தவறு தான் என ரிஷப் பண்ட் ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்து ரிஷப் பண்ட் பேசுகையில், “ராஜஸ்தான் அணி மிக சிறப்பாக பந்துவீசியது, ஆனால் கடைசி நேரத்தில் ரோவ்மன் பவுலின் அதிரடி ஆட்டம் எங்களுக்கு சிறிய நம்பிக்கையை கொடுத்தது.
கடைசி ஓவரின் மூன்றாவது பந்து நோ – பால் தான் என்பது மைதானத்தில் இருந்த அனைவருக்கும் தெரியும், ஆனால் அம்பயர் அதற்கு நோ – பால் கொடுக்காதது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.
நோ-பால் கொடுக்கப்பட்டிருந்தால் அது இந்த போட்டியில் பெரும் திருப்புமுனையாக அமைந்திருக்கும். மூன்றாவது நடுவர் தலையிட்டு நோ – பால் கொடுக்க வேண்டும் என நினைத்தோம்,
நான் எனக்கு ஏற்பட்ட விதிமுறைகளை மாற்ற முடியாது. பயிற்சியாளர் பிரவின் ஆம்ரேவை களத்திற்குள் அனுப்பியது நிச்சயம் சரியான முறை இல்லை தான், ஆனால் எங்களுக்கு நடந்ததும் பெரிய தவறும் தான்” என்று தெரிவித்தார்.
#Abdh