பாகிஸ்தானின் பவர்-ஹிட்டர் ஆசிப் அலி, 2022 டி20 ஆசியக் கோப்பைக்கு தயாராவதற்காக ஒவ்வொரு நாளும் 100 முதல் 150 சிக்சர்களை அடித்து பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
தேசிய உயர் செயல்திறன் மையத்தில் (NHPC) பயிற்சியில் ஈடுபட்ட ஆசிப் அலி, தொடர் மற்றும் போட்டிகளுக்கு முன்னதாக தனது பெரிய ஷாட்களைப் பயிற்சி செய்ய வேண்டிய நிலையில் தான் தீவிர பயிற்சி செய்ததாக கூறினார்.
“சராசரியாக 10 ரன்களுக்கு மேல் தேவைப்படும் நிலையில் நான் பேட்டிங் செய்கிறேன். அதற்கு, நீங்கள் பெரிய ஷாட்களை அடிக்க வேண்டும், அதற்கு நிறைய பயிற்சி தேவை” என்று PCB க்கு அளித்த பேட்டியில் ஆசிப் கூறினார்.
“நான் வழக்கமாக தினமும் 100-150 சிக்சர்களை அடிப்பேன், அதனால் நான் போட்டியில் 4 முதல் 5 சிக்சர்கள் வரை அடிக்க முடியும்” என்று ஆசிப் மேலும் கருத்து பகிர்ந்து கொண்டார்.
நான் டி20 போட்டிகளில் பேட்டிங் செய்ய வரும்போது, எனக்கு எப்போதும் அழுத்தம் இருக்கும். பந்தை அதன் Line & Length க்கு ஏற்ப அடிக்க முயற்சிக்கிறேன். ஒரே ஷாட்டை மீண்டும் மீண்டும் ஆடுவது பற்றி நான் நினைக்கவே இல்லை என்று அவர் கூறினார்.
ஆகஸ்ட் 28 அன்று இந்தியாவுக்கு எதிரான ஆசியக் கோப்பை 2022 போட்டி பரபரப்பாக எதிர்பார்கப்படும் நிலையில் ஆசிப் அலியின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
முழங்கால் காயம் காரணமாக ஷாஹீன் அப்ரிடி அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முகமது ஹஸ்னைன் அண்மையில் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.