நியூசிலாந்துக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு…!

நியூசிலாந்துக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு…!

இங்கிலாந்தின் இரண்டு முன்னணி வீர்ர்களான ஜிம்மி ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இங்கிலாந்து தேசிய டெஸ்ட் அணியில் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர், இந்த அணியில் இரண்டு அறிமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ பாட்ஸ் மற்றும் இளம் வீர்ர் ஹாரி ப்ரூக் ஆகியோர் அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஹோம் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கு 13 பேர் கொண்ட அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கரீபியன் தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில் பிராட் மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் நீக்கப்பட்டிருந்தாலும் புதிய டெஸ்ட் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லத்தின் முதல் அணிக்கு திரும்பியுள்ளனர்.

 

 

இங்கிலாந்து அணி:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், ஜாக் கிராலி, பென் ஃபோக்ஸ், ஜாக் லீச், அலெக்ஸ் லீஸ், கிரேக் ஓவர்டன், ஆலி போப், மேத்யூ பாட்ஸ்