நியூசிலாந்து பாகிஸ்தான் கிரிக்கெட்டை கொன்று விட்டது: சோயிப் அக்தர்

நியூசிலாந்து பாகிஸ்தான் கிரிக்கெட்டை கொன்று விட்டது: சோயிப் அக்தர்

கடைசி நிமிடத்தில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து நியூசிலாந்து விலகியது, பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தீவிர முயற்சியின் காரணமாக நீண்ட காலத்திற்குப் பிறகு நியூசிலாந்து அணி பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்தது. மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணி வீரர்கள் பாகிஸ்தான் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இன்று மதியம் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற இருந்தது. போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன், பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக நியூசிலாந்து தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தது.

இது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களையும், போர்டு நிர்வாகிகளையும், முன்னாள் வீரர்களையும், அந்நாட்டு ரசிகர்களையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

நியூசிலாந்து தொடரில் இருந்து விலகியது குறித்து சோயிக் அக்தர் டுவிட்டர் பக்கத்தில் ‘‘நியூசிலாந்து பாகிஸ்தான் கிரிக்கெட்டை கொன்று விட்டது’’ என கடுமையான வார்த்தையை பதிவு செய்துள்ளார்.

#AJ ABDH