நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி IPL ல் ஒப்பந்தம்..!

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி, இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்த போட்டியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லிக்கு பதிலாக லக்னோ அணியில் இணைந்துள்ளார்.

டேவிட் வில்லி தனிப்பட்ட காரணங்களுக்காக 2024 ஐபிஎல்லில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
லக்னோ அணியுடன் 1.25 கோடி இந்திய ரூபாய்க்கு மேட் ஹென்றி ஒப்பந்தம் செய்துள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஹென்றி நியூசிலாந்து அணிக்காக 25 டெஸ்ட், 82 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அவர் முன்பு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் இருந்தவர், இதுவரை இரண்டு ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அவர் 2017 இல் பஞ்சாப் அணிக்காக அந்த இரண்டு போட்டிகளிலும் விளையாடினார்.