நிஷா நிச்சயம் அடுத்த ஒலிம்பிக்கில் நீ தங்கம் வாங்குவாய், வலிகளிலிருந்து மீண்டு வா ❤

இந்தக் காலிறுதிப் போட்டியை நான் முழுமையாகப் பார்த்தேன். ஆட்டம் முடிய 70 விநாடிகள் இருந்த போது அவருடைய கைகளில் கடுமையான வலி. அப்போது நம்மவர் பாயிண்ட் 8. வடகொரியப் பெண்ணின் பாய்ண்ட் 2.

உடனடி சிகிச்சையால் எந்தப் பலனுமில்லை. இருந்தாலும் நாற்பது விநாடிகளை சமாளித்துவிட்டார். கைகள் இழுபட்டதில் இன்னும் ஆபத்தாகிப் போனது. மீண்டும் கடுமையான வலி. இம்முறை அழ ஆரம்பித்துவிட்டார்.

வெறும் முப்பது நொடிகள் காலம் கடத்தினால் கூட செமி ஃபைனல்.

ஆனால் அவரால் இயலவில்லை. வாக் அவுட் செய்யத் துடிக்கிறார், ஆனால் எத்தனை வருடக் கனவோ பாவம். வெளியே கோச் சமாளி சமாளி இன்னும் கொஞ்சம்தான் என்று வாட்ச்சை சுட்டிக் காட்டி கத்திக் கொண்டிருந்தார்.

வேறு வழியேயில்லாமல் கிட்டத்தட்ட ஒரு கையை மட்டுமே பயன்படுத்த வேண்டியச் சூழலில் தற்கொலை செய்துக் கொள்வதைப் போல களத்துள் புகுந்தார்.

எதிரே இருந்த வடகொரியர் நம்மாளுடைய பலவீனத்தை நன்கு உள்வாங்கி, நேரத்தையும் கணக்கிட்டு, மூன்று முறை மிக எளிதாகப் புரட்டி புரட்டிப் போட்டு ஒரே அடியாக ஒன்பது பாயிண்ட்களை இருபது நொடிக்குள் பெற்றார்.

கண்ணெதிரே ஒரு பதக்கக்கனவு தகர்ந்தது.

அப்படியே இந்தப் பெண் வென்றிருந்தாலும் நம் பெண்களுக்கு, நம் மல்யுத்தச் சம்மேளனம் என்ன செய்தது என்கிற நினைவுகள் கிளறாமலா இருந்திருக்கும் ?

பாவிகள். பாலியல் சுரண்டலைச் செய்துவிட்டு கொஞ்சம் கூட கூசாமல் கல் போலல்லவா இருந்தனர் ? ரோட்டில் எத்தனை போராட்டங்கள் செய்தும், பதக்கங்களை கங்கையில் வீசுவோம் என்றபோதும் கரையவில்லையே ? ஒருவனை ராஜினாமா செய்யவைத்துவிட்டு அவனுடைய மகனையே அல்லவா அந்தச் சம்மேளனத்துக்கு தலைவனாக்கினார்கள் ?

அந்தக் கயவர்கள் செய்த பாவமெல்லாம் இப்படி வீரர்களுக்கு வினையாக வருகிறது. அவனுக பாஷைல சொல்லணும்ன்னா கர்மா பூமராங்டா.

நிஷா நிச்சயம் அடுத்த ஒலிம்பிக்கில் நீ தங்கம் வாங்குவாய், வலிகளிலிருந்து மீண்டு வா ❤

#Paris2024Olympics
#olympics2024
#olympicwrestling

✍️ Raja Rajendran -Tamilnadu

Previous articleமுகமட் சிராஸ் எதிர்காலம் எப்படி அமையும் ?
Next articleபிரவீன் ஜெயவிக்ரம மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மூன்று குற்றச்சாட்டுகள் ..!