நீ எப்படி வேண்டுமானலும் பிட்ச் ரெடி பண்ணு, நான் பார்த்துக்கிறேன்.. கோலி, ரோகித் ஸ்பெஷல் பயிற்சி

நீ எப்படி வேண்டுமானலும் பிட்ச் ரெடி பண்ணு, நான் பார்த்துக்கிறேன்.. கோலி, ரோகித் ஸ்பெஷல் பயிற்சி

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நியூயார்க்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு பலப் பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள் விசேஷ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நியூயார்க்கில் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளம் மிகவும் அபாயகரமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா பேட்டிங் செய்யும்போது பந்து அவருடைய கையில் பட்டது.

மேலும் சில பந்துகளை கணிக்க முடியாமல் ரிசப் பண்ட் போன்ற வீரர்கள் கூட லேசான காயம் அடைந்தனர். எனினும் அது அச்சப்படும் அளவுக்கு இல்லை. இந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்வது இந்தியர்களுக்கு கடும் சிரமமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆடுகளத்தில் பந்தின் பவுன்ஸ் சரிசமமாக இல்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம் என்பதால் இந்திய அணி வீரர்கள் ஸ்பெஷல் பயிற்சியில் ஈடுபட்டார்கள். பயிற்சி செய்வதற்கான தயாரிக்கப்பட்ட ஆடுகளம் மெயின் பிச் போலவே தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

அதில் விராட் கோலி, ரோகித் சர்மா சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது வீசப்பட்ட பந்து ஒன்று ரோஹித் சர்மாவின் கட்டை விரலை தாக்கியது. இதில் சிறிது நேரம் வலியால் துடித்த ரோகித் சர்மா மீண்டும் அதனை பொருட்படுத்தாமல் பேட்டிங்கில் ஈடுபட்டார். இந்த நிலையில் விராட் கோலி முதலில் பேட்டிங் பயிற்சி முடித்த நிலையில் மீண்டும் ஒருமுறை பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு பந்துகளை அடித்து துவைத்தார்.

இந்த பயிற்சி பிட்சிலும் பந்தில் பவுன்ஸ் நிலையற்ற தன்மையில் வந்தது .இதனால் சில பந்துகள் கணிக்க முடியாத படி பவுன்ஸ் ஆனது. இதனை சரி பார்த்து இந்திய அணி வீரர்கள் விளையாடினார்கள். இதன் மூலம் பாகிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ளும் நம்பிக்கையை இந்திய வீரர்கள் பெற்றார்கள். எனினும் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு பயன்படுத்தப்படும் ஆடுகளும் ரன் குவிப்புக்கு சாதகமாக மாற்றப்பட்டு வருவதாக ஐசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

Previous articleவரலாறு படைத்த அமெரிக்கா! சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் தோல்வி.. டி20 உலககோப்பையில் அபாரம்
Next articleஇந்திய அணியின் வெற்றிக்கு காரணமே இந்த 2 வீரர்கள்தான்.. உண்மையை உடைத்த விமர்சகர்கள்