நெதர்லாந்துடன் விளையாடிவிட்டு ஸ்காட்லாந்து பந்துவீச்சாளர்களை பாராட்டிய பாபர் அசாம் ? (வீடியோ இணைப்பு)

நெதர்லாந்துடன் விளையாடிவிட்டு ஸ்காட்லாந்து பந்துவீச்சாளர்களை பாராட்டிய பாபர் அசாம் ?

நெதர்லாந்து கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டிருந்த பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நேற்று நிறைவுக்கு வந்தது .

மூன்றாவது போட்டியில் மிகப் பெரிய போராட்டத்திற்கு மத்தியில் 9 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் பாபர் அசாம் பெற்றுக்கொண்ட 91 ஓட்டங்கள் துணையோடு 206 ஓட்டங்களை குவித்தது, ஆயினும் பாகிஸ்தான் பந்து வீச்சுக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்த நெதர்லாந்து வீரர்கள் இறுதியில் 9 ஓட்டங்களால் தோல்வியை தழுவினர்.

இந்த தடுமாற்றத்திற்கு மத்தியில் போட்டிக்குப் பின்னர் பேட்டி கொடுத்த பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் ஸகொட்லாந்து பந்தைவீச்சாளர்களை பாராட்டியமை எல்லோருக்கும் ஆச்சரியத்தை உருவாக்கியது.

“We tried our bench strength. Early on the ball wasn’t coming on well. We were short in the first innings. But credit to the Scotland bowlers who bowled very well,”  என்றார் .

video ?

குறிப்பாக நெதர்லாந்து என்று குறிப்பிடுவதற்கு பதிலாகவே ஸ்கொட்லாந்து என்று குறிப்பிட்டிருப்பதாக  சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் அணித்தலைவரின் இந்தக் கருத்து நகைப்புக்குரியதாக நோக்கப்படுகிறது.

 

 

 

 

 

Previous article17 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்தின் டெஸ்ட் சுற்றுலா- அட்டவணை..!
Next articleஇந்தியாவிற்கு மரண பயத்தை காட்டிய சிஹாந்தர் ரசா -போராடி வென்ற இந்தியா…!