நெதர்லாந்தை துவம்சம் செய்து சாதனை வெற்றி பெற்றது இலங்கை..!

டி20 உலகக்கோப்பை: ஏழு ஓவர்களில் இலக்கை எட்டியது இலங்கை!

டி20 உலகக்கோப்பை தொடரின் 12ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை – நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது.

அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணி ஹசரங்கா, லஹிரு குமாரா ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 44 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா, ஹசரங்கா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இலங்கை அணி 7 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

#ABDH

Previous articleஇலங்கை வந்தடைந்தது பாகிஸ்தான் A அணி -முழுமையான அட்டவணை விவரம் ..!
Next articleஇந்தியா vs பாகிஸ்தான் போட்டி பற்றிய முழுமையான விபரங்கள்…!