நேபாள கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர் நியமனம்…!
நேபாள கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாக நேபாள கிரிக்கெட் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் 21 வயதான சுழல் பந்து வீச்சாளர் சந்தீப் லாமிச்சேனே அணியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
16 ஒருநாள் போட்டிகளிலும், 26 T20 போட்டிகளிலும் இவர் நேபாள அணிக்காக விளையாடியுள்ளார்.
இலங்கையரான புபுது தசநாயக்க அண்மையில் நேபாள அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள நிலையில் அணியின் தலைமைத்துவமும் மாற்றம் பெற்றுள்ளது.