பகலிரவு டெஸ்ட் போட்டிகளும்-ஆடுகளங்களும்!

பகலிரவு டெஸ்ட் போட்டிகளும்-ஆடுகளங்களும்!

இந்தியா-இலங்கை இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டியின் ஆடுகளம் குறித்தான அதிருப்தி முணுமுணுப்புகள் கிரிக்கெட் இரசிகர்களிடம் எழுந்தாலும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் இதுக்குறித்தான கருத்துகள் வேறுவிதமாய் இருக்கிறது.

பகலிரவு டெஸ்ட் போட்டியின் ஒரு நாளின் மூன்றில் இரண்டு பகுதி ஆட்டம், மின்விளக்கின் கீழும், Dew இடையூறோடும் ஆட வேண்டியதிருக்கும். மின்விளக்கின் வெப்பமும், DEWவும் ஆடுகளத்தின் மீது எத்தகைய தாக்கங்களை உருவாக்குகிறது? அதற்கு ஆடுகளம் எப்படி மாறுகிறது? அதற்கேற்றார்போலான ஆடுகளத்தை எப்படி அமைக்க வேண்டும்? என்பது குறித்த அனுபவங்கள் ஆடுகள தயாரிப்பாளர்களுக்கு மிகமிகக் குறைவு. இது அவர்களுக்கு ஒரு புதுப்பணி, புது சவால். தொடர்ச்சியாக இதில் ஈடுபடுவதின் மூலம் கிடைக்கும் அனுபவத்திலிருந்துதான், பகலிரவு டெஸ்ட் போட்டிகளுக்கான ஒரு முழுமையான ஆடுகளத்தை அவர்களால் உருவாக்க முடியும்.

மேலும் பிங்க் நிற பந்தின் பளபளப்பு பந்தை சிலநேரங்களில் குறைவாக எகிற வைக்கிறது. அடுத்து பந்தை கவனிப்பதில் பிங்க் நிறத்தால் ஏற்படும் பார்வை சிரமங்கள், இதுபோன்றவைகளால் வேகமாய் சரியும் விக்கெட்டுகளும் ஆடுகளம் தரமற்றது என்கின்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

ஆகவே பகலிரவு டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடுகளங்கள் குறித்து இப்போதைக்குக் கருத்துச் சொல்வது சரியாய் இருக்காது என்றே நினைக்கிறேன்!

நன்றி: ரசல் அர்னால்டு-அபினவ் முகுந்த்

இவர்கள் பதிவின் மேலுள்ள விசயத்தைக் கொஞ்சமாய் பேசிக்கொண்டதைக் கேட்டு, பின்பு எனக்குண்டான சிந்தனையிலிருந்து இப்பதிவை எழுதியிருக்கிறேன்!

Richards