இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் தன்சித் ஹசன் மற்றும் ரிஷாத் ஹொசைன் ஆகியோரின் அதிரடியுடன் பங்களாதேஷ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி இழப்பது வரலாற்றில் இது இரண்டாவது தடவையாகும்.
சிட்டகாங்கில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 236 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய வங்கதேசம் 40.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
இன்னிங்சை தொடங்கிய துன்சித் ஹாசன் 81 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்தார். அனாமுல் ஹக் 12 , நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 1, தவ்ஹித் ஹிரிடோய் 22 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
எனினும் முஷ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களைப் பெற்று தனது அணியின் வெற்றியைக் காக்க, ஹசன் மிராஸ் 25 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
178 ஓட்டங்கள் என்ற நிலையில், இன்னிங்ஸின் 6வது விக்கெட்டாக ஹசன் ஆட்டமிழக்க இலங்கை மீண்டும் போட்டிக் களத்தில் இறங்க முயற்சித்தது, ஆனால் பின்னர் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய ரிஷாத் ஹொசைன் 18 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பெற்று இலங்கையின் அனைத்து நம்பிக்கைகளையும் ஏமாற்றினார். .
அவரது இன்னிங்ஸில் 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கும். பந்துவீச்சில் லஹிரு குமார 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், வனிது ஹசரங்க இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 235 ஓட்டங்கள் பெற்றது.
மீண்டும் தோல்வியடைந்த அவிஷ்க பெர்னாண்டோ 4 ல் ஆட்டமிழந்தார். சதீர சமரவிக்ரம 14 பெற்றார். கேப்டன் குசல் மெண்டிஸ் 29 எடுத்தார். சாரித் 37 எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக வீழ்ந்து கொண்டிருந்த வேளையில் 6ஆம் இலக்க துடுப்பாட்ட வீரர் ஜனித் லியனகே 102 பந்துகளில் 101 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியை போராட்டகரமான ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார். அவரது இன்னிங்ஸில் 2 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கும்.
7ஆவது விக்கெட்டு 154 ஓட்டங்களுடன் வீழ்ந்த பின்னர் ஜனித் மற்றும் மஹிஷ் தீக்ஷன ஆகியோர் இந்த இன்னிங்ஸின் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைந்தது. இருவரும் 8வது விக்கெட்டுக்கு 60 ஓட்டங்கள் (78) சேர்த்தனர்.
பந்துவீச்சில் தஸ்கின் அஹமட் 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், முஸ்டர்பிசுர் ரஹ்மான் மற்றும் மெஹ்தி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.