பங்களாதேஷிலிருந்து இடைநடுவே நாடு திரும்பும் சந்திமால்..!

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணியில் இருந்து தினேஷ் சண்டிமால் ‘குடும்ப மருத்துவ அவசர தேவை’ காரணமாக உடனடியாக விலகியுள்ளார்.

அதன்படி, சந்திமால் உடனடியாக வீடு திரும்புவார்.

ஸ்ரீலங்கா கிரிக்கட், அவரது அணியினர் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் தினேஷ் சந்திமாலுக்கு தேவையான இந்த தருணத்தில் அவருக்கு முழு ஆதரவை வழங்குவதுடன், அவரது மற்றும் அவரது குடும்பத்தினரின் தனியுரிமையை பொதுமக்கள் மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அறிக்கையிட்டுள்ளனர்.

பங்களாதேஷின் சட்டோகிராமில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் இன்றாகும்.

 

 

 

Previous articleபாகிஸ்தான் அணியின் தலைமைத்துவ மாற்றம் -ஷஹீன் அதிருப்தி..!
Next articleICC T20 Worldcup- ஸ்டோக்ஸ் விலகல்..!