பங்களாதேஷில் வரலாற்றுச் சாதனை படைத்தது மேற்கிந்திய தீவுகள்

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் சட்டோகிரம் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளது.

ஆசிய மைதானம் ஒன்றில் துரத்தி பெறப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை எனும் சாதனையை புரிந்து 395 ஓட்டங்கள் வெற்றி இலக்கை கடந்து, பங்களாதேஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் சாதித்து கிரிக்கட் ரசிகர்களை பிரமிக்கத்தக்க வைத்துள்ளது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மேற்கிந்திய தீவுகள் 3-0 எனும் அடிப்படையில் அவமானகரமான தோல்வியை பெற்றாலும் டெஸ்ட் போட்டியில் தங்களுடைய பலத்தை நிரூபித்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது .

395 என்று இலக்கு நோக்கி துடுப்பெடுத்தாடுகையில் அறிமுக வீரர் கயில் மாயர்ஸ் இரட்டை சதம் அடித்து  ஐந்தாவது நாளில் மேற்கிந்திய தீவுகளுக்கு மறக்கமுடியாத சரித்திரபூர்வ ஒரு வெற்றியை பரிசளித்திருக்கிறார்.

நான்காவது இன்னிங்சில் டெஸ்ட் இரட்டை சதம் அடித்தவர்கள் ஐவர், அறிமுகப் போட்டியில் இரட்டை சதம் அடித்தவர்கள் ஐவர், ஆனால்  144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுகப் போட்டியில் 4வது இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை இன்று கயில் மாயர்ஸ் தனதாக்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிரேஸ்ட வீரர்கள் கொரோனா பயம் காரணமாக வங்கதேச சுற்றுலாவை புறக்கணித்திருந்த நிலையில் இளம் வீரர்கள் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி இமாலய சாதனையை படைத்திருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கு மேற்கிந்திய தீவுகளின் வெற்றியும் சான்று பகர்கிறது .

வாழ்த்துக்கள் மேற்கிந்திய தீவுகளின் கருப்பு தங்தகங்களே..!

? துரத்தியடிக்கப்பட்ட மிகச்சிறந்த டெஸ்ட் வெற்றிகள்

1.மேற்கிந்திய தீவுகள் 418/7 v அவுஸ்ரேலியா (2003)

2️⃣ தென் ஆபிரிக்கா 414/4 v அவுஸ்ரேலியா (2008)

3️⃣ இந்தியா 406/4 v மேற்கிந்திய தீவுகள் (1976)

4️⃣ அவுஸ்ரேலியா 404/3 v இங்கிலாந்து (1948)

5️⃣ மேற்கிந்திய தீவுகள் 395/7 v பங்களாதேஷ் (2021) ?? (இன்று)