ஜிம்பாப்வே கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருந்த வங்காளதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நிறைவுக்கு வந்திருக்கிறது.
இன்று நிறைவுக்கு வந்த மூன்றாவதும் இறுதியுமான ட்வென்டி ட்வென்டி போட்டியில் ஜிம்பாப்வே அணி அபாரமாக 10 ஓட்டங்களால் வெற்றிபெற்று 2-1 என தொடரை கைப்பற்றி இருக்கிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது,
இதிலே நஸும் ஹொசைன் பந்துவீச்சில் பேர்ல் ஒரே ஓவரிலேயே 34 ஓட்டங்கள் விளாசி தள்ளியமை குறிப்பிடத்தக்கது.ஜிம்பாப்வே அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் அபே ர்ல், 28 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார்.
லூக் ஜோங்வே 35 ரன்களையும், கிரேக் எர்வின் 24 ரன்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஹசன் மஹ்மூத் மற்றும் மஹெதி ஹசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பங்களாதேஷ் இன்னிங்ஸ் சார்பாக அபிஃப் ஹொசைன் 39 ஓட்டங்களையும் மஹ்முதுல்லா 27 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் விக்டர் நியுச்சி 3 விக்கெட்டுகளையும், பிராட் எவன்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
158 எனும் வெற்றி இலக்குடன் ஆடிய பங்களாதேஷ் அணிக்கு தங்களது இறுதி இரண்டு ஓவர்களில் 26 ஓட்டங்கள் தேவையாக இருந்தது, இருப்பினும் ஜிம்பாப்வே போட்டியில் 10 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.