பங்களாதேஷை இலகுவாய் பந்தாடியது இங்கிலாந்து…!

டி20 உலகக்கோப்பை: ராய் அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 20 ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் டைமல் மில்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஜேசன் ராய் அரைசதம் கடந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

அதன்பின் அவரும் 126 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ் இணை அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.

இதன்மூலம் 14.1 ஓவர்களில் இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.

Previous articleதோனியின் டி20 உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான சாதனையை முறியடித்த சொயிப் மாலிக்..!
Next article மஹிந்தவின் வாரிசு ரோஹித ராஜபக்ச கிரிக்கட்டில் அறிமுகம், மேத்யூஸ் அசத்தல்..!