பங்களாதேஷ் மீண்டும் தோல்வி -ஒருநாள் தொடரும் ஜிம்பாப்வே வசம்…!

சிக்கந்தர் ராசாவின் சிறப்பான ஆட்டத்தால் ஜிம்பாப்வே 2-0 என்ற கணக்கில் தொடரை ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் கைப்பற்றியது ஜிம்பாப்வே.

பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான சுற்றுப்பயணத்தின் டி20 தொடர் சமீபத்தில் முடிவுக்கு வந்தது, ஜிம்பாப்வே தொடரை 2-1 என கைப்பற்றியது.

மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் டி20 போட்டியில் வெற்றி தாகத்தை ஒரு நாள் போட்டிக்கு கொண்டு வந்த ஜிம்பாப்வே அணி இன்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றது.

மேலும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் 2-0 என்ற கணக்கில் போட்டித் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது.

இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வங்கதேசம் 5 விக்கெட் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்வியை சந்தித்தது.இதன் மூலம் ஜிம்பாப்வே 2-0 என தொடரை கைப்பற்றியது.

இன்றைய போட்டியில் toss வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் வங்கதேச அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்கள் என்ற அபார ஸ்கோர் பெற்றது.

பங்களாதேஷ் அணியில் சிறப்பான இன்னிங்ஸைத் தொடங்கிய மஹ்முதுல்லா 90 ஓட்டங்களைப் பெற, அதற்கு அபார ஆதரவை வழங்கிய தலைவர் தமிம் இஃபால் 50 ஓட்டங்களைப் பெற்றார். அபிஃப் ஹொசைன் 41 . பந்துவீச்சில் சிக்கந்தர் ராசா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்படி 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 47.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே இன்னிங்ஸில் அதிக ரன் குவித்த சிக்கந்தர் ராசா 117 ரன்களை குவித்து ஜிம்பாப்வே இன்னிங்ஸை காப்பாற்றினார், அவரது இன்னிங்ஸில் 4 அபார சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும்.

பந்துவீச்சில் ஹசன் மஹ்மூத் மற்றும் மெஹிடி ஹசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது ஜிம்பாப்வே அணியை வெற்றிக்குக் காப்பாற்றிய சிக்கந்தர் ராசாவுக்கு கிடைத்தது.

அதன்படி, ஜிம்பாப்வே அணி ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.