பாகிஸ்தானை பந்தாடிய இங்கிலாந்தின் இரண்டாம்தர அணியை குறித்து ஒயின் மோர்கன் கருத்து..!

பாகிஸ்தானை பந்தாடிய இங்கிலாந்தின் இரண்டாம்தர அணியை குறித்து ஒயின் மோர்கன் கருத்து..!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கும், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடர் இடம்பெற்று வருகிறது.

முதல் இரு ஆட்டங்களிலும் இலகுவான வெற்றியை பெற்றிருக்கின்ற இங்கிலாந்தின் இரண்டாம் தர அணி பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை இலகுவாக கைப்பற்றியிருக்கிறது.

இலங்கை உடனான தொடரில் பங்கெடுத்து மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால், அந்த 15 வீரர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில்  திடீரென மாற்று அணியை அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இங்கிலாந்துக் கிரிக்கெட் சபைக்கு உருவானது.

இதன் காரணத்தால் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அணியொன்றை தயார்படுத்தி இந்த தொடரில் பங்கேற்க  செய்திருக்கிறார்கள்.

இது தொடர்பில் இங்கிலாந்தின் நிரந்தர அணி தலைவர் மோர்கன் தன்னுடைய கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார்.

ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆகிய வீரர்கள் உபாதைகளால் அவதி படுகிறார்கள்.இப்படியான தருணத்தில் இங்கிலாந்து அணியில் நிரந்தர இடம் பிடித்துக் கொண்டிருந்த ஒரு வீரரான பென் ஸ்டோக்ஸ் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த இளம் அணி மிகச்சிறப்பாக சாதித்திருக்கிறது.

எதிர்காலம் நோக்கி பயணப்பட இது இலகுவாக இருக்கும் எனவும் அடுத்த போட்டிக்காக காத்திருப்பதாகவும மோர்கன் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தின் இரண்டாம் தர அணியிடம் தோல்வி அடைந்திருப்பது இப்போது பாகிஸ்தான் ரசிகர்களை கவலையடையச் செய்திருக்கிறது.

மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் எவ்வாறு எழுந்து வரும் என்பதுதான் பாகிஸ்தானிய ரசிகர்களின் எதிர்பார்பாக  காணப்படுகிறது.