பாகிஸ்தான் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் – வெளியாகும் தகவல்..!

பாகிஸ்தானின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக பீட்டர் மூர்ஸ் போட்டியிலிருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

58 வயதான மூர்ஸ் இரண்டு முறை இங்கிலாந்தின் தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.

அறிக்கையின்படி, PCB  வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்க ஆர்வமாக உள்ளது. பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அசார் மஹ்மூத் அந்தப் பாத்திரத்தை வகிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மஹ்மூத் முன்பு மிக்கி ஆர்தரின் காலத்தில் பாகிஸ்தானின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றினார், மற்றும் தற்போது PSL அணியான முல்தான் சுல்தான் அணியுடன் பணிபுரிகிறார்.

மிஸ்பா மற்றும் வக்கார் ஆகியோர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, PCB சக்லைன் முஷ்டாக் மற்றும் அப்துல் ரசாக்கை நியூசிலாந்து தொடருக்கான இடைக்கால பயிற்சியாளர்களாக நியமித்துள்ளது, அங்கு பாகிஸ்தான் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது.

தேசிய உயர் செயல்திறன் மையம் (NHPC) மற்றும் தற்போது முகமது வாசிம் தலைமையிலான தேர்வு குழு ஆகியவற்றில் பயிற்சி ஊழியர்களின் வகிபாகத்திலும் மாற்றம் இருக்கலாம் என்று PCB வட்டாரங்கள் கூறியுள்ளன.

செப்டம்பர் 13 அன்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவராக பொறுப்பேற்கும் முதல் போட்டியாளரான ரமீஸ் ராஜா தனது சொந்த அணியைக் கொண்டுவர விரும்புவதால் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.