#INDvZIM-பாகிஸ்தான் அணியின் சாதனையை சமன் செய்யவுள்ள இந்தியா ….!

பாகிஸ்தான் அணியின் சாதனையை சமன் செய்யவுள்ள இந்தியா ….!

இந்திய மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் ஜிம்பாப்வே மண்ணில் இடம்பெற்று வருகின்றது.

முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என வென்றுள்ளது, முதலாவது போட்டியில் 10 விக்கெட்டுகளாலும், இரண்டாவது போட்டியில் 5 விக்கெட்டுகளாலும் வென்று இந்தியா தொடரை தனதாக்கிய நிலையில், மூன்றாவது போட்டியில் இந்தியா வெற்றி பெறுமாகவிருந்தால் பாகிஸ்தான் அணி இதுவரை படைத்திருக்கும் ஒரு சாதனையைச் சமப்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாக்கும்.

குறிப்பாக ஜிம்பாப்வே அணியை பொறுத்தவரையில் இவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக மொத்தம் 54 தோல்விகளையும், இந்தியாவுக்கு எதிராக 53 தோல்விகளையும், பங்களாதேஷுக்கு எதிராக 51 தோல்விகளையும் சந்தித்தது.

ஆகமொத்தத்தில் குறித்த அணி ஒன்றுக்கு எதிராக ஜிம்பாப்வே அடைந்த தோல்விகள் எண்ணிக்கையில் பாகிஸ்தானுக்கு எதிராக கிடைத்திருக்கும் 54 தோல்விகள் சாதனையை, இந்தியாவுக்கு எதிராகவும் (54) நிலைநாட்டும் வாய்ப்பு உருவாகியுள்ளது.