பாகிஸ்தான் அணியில் இன்னுமொருவருக்கு உபாதை- தொடரும் சிக்கல்…!

இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து ஷாநவாஸ் தஹானி வெளியேறியுள்ளார்.

உபாதை காரணமாக அவர் வெளியேயதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.வெள்ளிக்கிழமை ஷார்ஜாவில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது.

துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நாளை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஷாநவாஸ் தஹானி நீக்கப்பட்டதால் பாகிஸ்தான் சிக்கலால் அவதிப்படுகறது. 2022 ஆசிய கோப்பையின் போது காயங்கள் பாகிஸ்தானை தொடர்ந்து வேட்டையாடுகின்றன.

PCB யின் கூற்றுப்படி, அடுத்த 48-72 மணிநேரங்களுக்கு மருத்துவக் குழு அவரைக் கண்காணிக்கும், அதைத் தொடர்ந்து ஸ்கேன் செய்வது மற்றும் தொடரில் தொடர்ந்து பங்கேற்பது உள்ளிட்ட முடிவுகளை அவர்கள் எடுப்பார்கள் என அறியவருகின்றது.

முன்னதாக, பாகிஸ்தான் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி இல்லாமல் நெருக்கடியை சந்தித்தது, அதே நேரத்தில் முகமது வாசிம் ஜூனியரும் போட்டி தொடங்குவதற்கு முன்பு தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் இப்போது ஷாநவாஸ் தஹானி உபாதைக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக உபாதையடைந்த இருவருக்கும் பதிலாக முறையே முகமது ஹஸ்னைன் மற்றும் ஹசன் அலி அணியில் மாற்று வீரர்களாக இடம் பெற்றனர்.