பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக முன்னாள் வீரர் ரமீஷ் ராஜாவை நியமிக்க நடவடிக்கை..!

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக முன்னாள் வீரர் ரமீஷ் ராஜாவை நியமிக்க நடவடிக்கை..!

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் ரமீஸ் ராஜாவை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

பாகிஸ்தான் பிரதமரும், பாகிஸ்தான் அணிக்கு 1992 உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த நாயகனுமான இம்ரான் கான் இது தொடர்பில் ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

 

எது எவ்வாறாயினும் தற்போதைய தலைவராக இருக்கின்ற இஷான் மணியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 24ஆம் திகதி நிறைவு பெறுகிறது.

இவருக்கு பதவி நீடிப்பு செய்வதா அல்லது ரமீஸ் ராஜா அல்லது ஓய்வுபெற்ற நீதியரசர் அஜமத் ஷேக் ஆகிய இருவரில் ஒருவரை  நியமிப்பது  குறித்து இம்ரான்கான் வரும் திங்கட்கிழமை முடிவெடுப்பார் என செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

Previous articleRCB அணியில் இப்போது உள்ள வெளிநாட்டு வீர்ர்கள் விபரம் – ஹசரங்கவும் , சமீரவும் பிளேயிங் XI இல் இடம்பெறவும் வாய்ப்பு ?
Next article344 வாரங்கள் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் நீடித்து மாபெரும் சாதனை..!