பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் – சிரேஸ்ட வீரர் உலக்கிண்ண அணியில் சேர்ப்பு..!
பாகிஸ்தான் உலக கிண்ணத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்த அணியில் இருந்து முதுகு தண்டு வலி காரணமாக முன்னணி துடுப்பாட்ட வீரர் ஷோயிப் மஷூத் அணியில் இருந்து நீக்கப்பட்டதால் ,அவருக்கு பதிலாக சொயிப் மாலிக் அணியில் இணைக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் உள்ளூர் டி20 போட்டிகளில் நேற்று சதமடித்த சர்ஜீல் கான் அல்லது அனுபவமிக்க சோயிப் மாலிக் ஆகிய இருவரில் ஒருவர் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தன.
இந்தநிலையிலேயே அனுபவ வீரர் சொயிப் மாலிக் அணியில் இடம்பிடித்துள்ளார்.
நேற்றைய நாளில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவர்களுடைய மாற்றியமைக்கப்பட்ட புதிய உலக்கிண்ண அணியை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதிலே முன்னாள் தலைவர் சர்ப்ராஸ் அஹமட் அணியில் சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.