பானுக உபாதை, இருபது-20 போட்டியில் பங்கேற்பது சந்தேகம் …!

பானுக உபாதை ,இருபது-20 போட்டியில் பங்கேற்பது சந்தேகம்…!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் இலங்கை அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பானுக ராஜபக்ச உபாதை காரணமாக விளையாாட முடியாதிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இதன் காரணத்தால் ராஜபக்சவால் இன்றைய முதலாவது ட்வென்டி ட்வென்டி போட்டியில் பங்கேற்க முடியாது என்று செய்திகள் குறிப்பிடுகின்றன.

இவருக்கு பதிலாக அணியில் அஷேன் பண்டார இணைத்துக் கொள்ள இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன .

 3வது ஒருநாள் போட்டியின்போது உபாதையால்  விளையாடாதிருந்த வணிந்து ஹசரங்க இன்றைய போட்டியில் விளையாடுவதற்காக வாய்ப்பு இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

முன்னதாக நிறைவுக்கு வந்து ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.