பான்டால் ஒருபோதும் மஹேந்திர சிங் தோனி ஆகிவிட முடியாது- விமர்சனம் ( வீடியோ இணைப்பு)

பான்டால் ஒருபோதும் மஹேந்திர சிங் தோனி ஆகிவிட முடியாது- விமர்சனம் ( வீடியோ இணைப்பு)

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரின் பரபரப்பான ஆட்டத்தில் தசுன் சானக்க தலைமையிலான இலங்கை அணி அபார வெற்றியை பதிவு செய்தது.

இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்வியை தொடர்ந்து இன்னுமொரு தோல்வியை தழுவி இந்த போட்டி தொடரிலருந்து வெளியேறும் அபாயகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த போட்டியை பொறுத்தவரை இறுதி ஓவரில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்டன ,முதல் 4 பந்துகளில் 5 ஓட்டங்களை இலங்கை பெற்றுக்கொண்டது, இரண்டு பந்துகளில் இரண்டு ஓட்டங்கள் தேவை என்கின்ற நிலைக்கு தள்ளப்பட்ட போது 5-வது பந்தை வீசிய அர்ஷ்தீப் சிங் மிகச் சிறப்பாக பந்து வீசினார், ஆனால் அதை உள்வாங்கிக் கொண்ட பான்ட் அதன் மூலமாக ஆட்டம் இழக்கச் செய்யும் வாய்ப்பைத் தவறவிட்டால் விமர்சனத்தை சந்தித்துள்ளார்.

இந்த நிலையிலே பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2014  T20 போட்டியில் தோனி சாதுரியமாக செய்த விஷயம் ரசிகர்களால் பகிரப்படுகிறது, எல்லோராலும் தோனி ஆகிவிட முடியாது எனும் கருத்துக்களும் பகிரப்படுகின்றன.

இரண்டு காணொளிகளையும் கீழே தருகின்றோம் பாருங்கள் ?

 

 

 

 

 

 

.

Previous articleஇந்தியா எங்கே தவறு செய்தது -திருத்தப்பட வேண்டிய விடயங்கள் என்ன ?
Next articleஅர்ஷ்தீப் சிங் -இந்திய எதிர்காலம் ❤️