பான்ட் அதிரடி சதம், கில் நம்பிக்கை கொடுத்தார், பயிற்சியில் இந்தியர்களின் ஆதிக்கம்..! (விபரங்கள் )

இங்கிலாந்தில் வரும் 18 ம் திகதி ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தொடர்பில் ரசிகர்களது ஒட்டுமொத்தமான கவனமும் திரும்பியிருக்கிறது.

இந்திய ,நியூசிலாந்து அணிகள் எவ்வாறு போட்டியை எதிர்கொள்ளப்போகின்றன எனும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கும் நேரத்தில், இந்திய அணி தமக்கிடையே பிரிந்து பயிற்சி ஆட்டம் ஒன்றில் பங்கேற்றுள்ளது.

இந்த போட்டியில் விக்கெட் காப்பாளர் பான்ட் ஆட்டம் இழக்காது 94 பந்துகளில் 121 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார், அதேபோன்று ஆரம்ப வீரர் சுப்மான் கில் 85 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

கில் பெற்றுக்கொண்ட 85 ஓட்டங்கள் மூலமாக ஆரம்ப வீரர் யார் எனும் கேள்விக்கு நம்பிக்கையான பதிலை தேர்வாளர்களுக்கு கொடுத்துள்ளார் எனலாம்.

இந்திய அணியின் முதல்தெரிவு துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் கோஹ்லி தலைமையிலும், இந்தியாவின் முதல்தெரிவு பந்து வீச்சாளர்கள் அனைவரும் ராகுல் தலைமையில் எதிராணியிலுமாக போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

கோஹ்லி தலைமையிலான அணி, இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் திணறியுள்ளது, 36 ஓட்டங்களுக்கு அவர் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இதன்முலம் கில் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் பதினொருவர் அணியில் தமக்கான இடத்தை உறுத்திப் படுத்தியிருக்கிறார்கள்.

இந்திய அணி வரும் நாட்களில் இன்னுமொரு போட்டியிலும் இவ்வாறு விளையாடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.