பாபர் அசாமின் தலைமைத்துவத்தில் குற்றஞ்சாட்டும் மொயின் கான் – தோல்விக்கு அவரே காரணம்…!

இலங்கைக்கு எதிரான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான், பாபர் அசாமின் “எதிர்மறையான” கேப்டன்ஷிப்பை கடுமையாக சாடியுள்ளார்.

முதல் 10 ஓவர்களில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது பாபர் அசாம் இன்னும் அதிகமாக தாக்குதல் பாணியை கடைப்பிடித்திருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பாபர் தாக்குதல் கள வியூகம் (Attacking field) அமைக்கத் தவறிவிட்டதாகவும், இலங்கை இன்னிங்ஸை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தனது ஸ்டிரைக் பவுலர்களை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இலங்கை 8.5 ஓவர்களில் 58/5 என்று இருந்தது ஆனால் 170 ரன்கள் எடுத்தஉ போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன் மகுடம் சூடிய நிலையிலேயே மொயின் பாபர் மீது பழியை சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#T20WorldCup | #AsiaCup2022Final

எமது YouTube தளத்துக்கு பிரவேசியுங்கள் ?

 

 

 

 

Previous articleமந்தனாவின் அதிரடியில் மண்கௌவியது இங்கிலாந்து..!
Next articleMI அணியில் பதவி உயர்த்தப்பட்ட மஹேல, ஜகீர் கான்..!