FC பார்சிலோனா மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகிய இருதரப்பும் கடந்த ஒரு வாரமாக மிகவும் வியத்தகு முறையில் இருந்ததை காணமுடிந்தது, எல்லாம் முடிந்தது எனும் நிலையை இருவருக்கும் தோற்றுவித்தது.
அர்ஜென்டினாவுக்காக ஒரு வரலாற்று முக்கியத்துவமான கோபா அமேரிக்க கிண்ண வெற்றிக்குப் பிறகு, 34 வயதான அவர் தனது விடுமுறை நாட்களில் கிளப்புடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருந்தார். இருப்பினும், ஸ்பானிஷ் லிகாவின் கடுமையான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் காரணமாக அவருக்கு ஒரு புதிய ஒப்பந்தத்தை கொடுக்க முடியாது என்று கிளப் தெரிவித்ததால் சில நாட்களில் நிலமை தலைகீழாக மாறியது.
இரு தரப்பும் மானசீகமாக பிரிந்து செல்ல விரும்பவில்லை என்றாலும், மெஸ்ஸி 17 புகழ்பெற்ற சீசன்களை கழித்த எஃப்.சி பார்சிலோனா கிளப்பை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இதயப்பூர்வமான பிரியாவிடை உரையில் தனது அணியினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றிபாராட்டி கண்ணீர்மல்க விடைபெற்றார்.
அதன்பின்னர் இரு தரப்பினரும் 48 மணி நேரத்தில் மிக விரைவாக முன்னேறியது போல் தெரிகிறது. பரபரப்பான நகர்வை நிறைவு செய்வதற்காக மெஸ்ஸி பாரிஸுக்குப் PSG பயணிக்கப் போகிறார், பார்சிலோனா தனது சுவரொட்டிகளையும் கேம்ப் நோ ஸ்டேடியத்தில் இருந்து அகற்றிவிட்டது என்பது மிகப்பெரிய வேதனைதான்.
கால்பந்து வரலாற்றில் மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க Club – Player உறவு இறுதியாக ஒரு சோகமான முடிவுக்கு வந்துவிட்டது. இருப்பினும், இந்த விஷயங்கள் தொழில்முறை கால்பந்தின் ஒரு பகுதியாகும் மற்றும் கிளப் மற்றும் வீரர் இருவரும் யதார்த்தத்திற்கு வந்துள்ளனர் என்பதை மறுக்கமுடியாது.
இந்த வாரம் புதிய சீசன் தொடங்குவதால், பார்சிலோனா ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் பழைய அத்தியாயத்தை மூடுவதற்கான முதல் படியை எடுத்துள்ளது.
லியோனல் மெஸ்ஸியின் சுவரொட்டி, அவர்களின் சொந்த மைதானத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்தது, இப்போது அவை நீக்கப்பட்டுள்ளன.
அவர் வெளியேறுவது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டதில் ஆச்சரியமில்லை. நெய்மார் 2017 இல் கிளப்பை விட்டு வெளியேறியபோதும் இதேதான் நடந்தது என்பதை நாம் மறந்திருக்க மாட்டோம்.
Lionel Messi posters on the side of the Nou Camp being removed pic.twitter.com/qzthxpMpxN
— . (@ElijahKyama) August 10, 2021
ஆனால் எல்லாம்கடந்து அது இப்போதைக்கு மெஸ்ஸி-பார்கா கதையும் முடிவுக்கு வந்து அவரது சுவரொட்டிகளும. கேம்ப் நோவிலிருந்து அகற்றப்படும் நிகழ்வுவரை நடத்தேறியுள்ளது.
மெஸ்ஸியின் வெளியேற்றத்துக்கு பின்னர் பார்சிலோனா, ரொனால்டோவின் ஜுவான்டஸை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து ஜோன் கேம்பர் டிராபியை உயர்த்திய பின்னர் தனது புதிய சகாப்தத்தை ஆரம்பித்ததாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.
மெம்பிஸ் டெபே, மார்ட்டின் பிராத்வைட் மற்றும் ரிக்கி புயிக் ஆகியோர் மெஸ்ஸிக்கு பிந்தைய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் நம்பிக்கையை இப்போது காண்பித்துள்ளனர்.
கிளப் இப்போது 2021-22 சீசனின் முதல் லீக் ஆட்டத்திற்காக ஞாயிற்றுக்கிழமை ரியல் சோசிடாட் அணியை சந்திக்கவுள்ளது.
எது எவ்வாறாயினும் தொழில்முறை கால்பந்தாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சம்பவத்தை எடுத்துக் கொண்டு மெஸ்ஸி, பார்சிலோனா ரசிகர்களும் கடந்து விடுவதே உண்மையானது.
ஒவ்வொன்றுக்கும் ஒரு தொடக்கம் இருக்குமாயின் அவை எல்லாவற்றிற்கும் ஒரு மனது மறக்காத முடிவு ஒன்றும் இருக்கும்.
மெஸ்ஸிக்கும் அதுதான் நடந்திருக்கிறது, பார்சிலோனா கழகத்தில் இருந்து விடைபெற்ற மெஸ்ஸி, பார்சிலோனா அரங்கில் இருந்தும் அவர் சுவரொட்டிகள் அகற்றப்படும் வரை எல்லாம் நடந்து முடிந்திருக்கிறது.