பார்டர் கவாஸ்கர் தொடரை வெல்லப்போவது யார்? ரிக்கி பாண்டிங் கணிப்பு
டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஆசிய அணிகளுக்கு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மண்களில் வெற்றி பெற வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருக்கும். ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளத்தில் விளையாடுவது ஆசிய கண்ட வீரர்களுக்கு கடும் சிரமத்தை கொடுக்கும்.
ஆனால் இது எல்லாம் பொய்யாக்கிய இந்திய அணி கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் முயற்சியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் நவம்பர் மாதம் தொடங்குகிறது. இந்த நிலையில் இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணிப்பு வெளியிட்டு இருக்கிறார்.அது குறித்து தற்போது பார்க்கலாம். இந்த தொடர் நிச்சயம் இரு அணிகளுக்குமே சவாலாக இருக்கும். இந்தியாவை விட ஆஸ்திரேலியா தான் தங்களுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
ஏனென்றால் கடந்த இரண்டு முறை இந்தியா இங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது வெற்றி பெற்று உள்ளனர். இதனால் இம்முறை ஆஸ்திரேலியாவுக்கு நிச்சயம் நெருக்கடி இருக்கும். அதே சமயம் தற்போது ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. கடந்த இரண்டு முறையும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தான் நடைபெற்றது. இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பல போட்டிகள் நிச்சயம் டிராவாகாது என்று நினைக்கின்றேன்.
இந்த தொடரில் யார் வெற்றி பெறுவார்கள் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் தான் சொல்வேன். ஏனென்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான் எப்போதும் கணிப்பை வெளியிட மாட்டேன்.இந்த தொடரில் ஏதேனும் ஒரு போட்டியில் மழை குறிப்பிடலாம். சில போட்டிகள் சமனில் முடியலாம். இதனால் ஆஸ்திரேலியா இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.
நான் இந்தியாவுக்கு எதிராக பல டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அப்போது எங்களுக்குள் நல்ல ஒரு போட்டி உருவானது. நான் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணி முற்றிலுமாக மாறி இருக்கிறது. இந்திய அணி தற்போது எழுந்து சண்டையிடுகிறார்கள். நீங்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடுகிறீர்கள் நினைவிருக்கட்டும் என்ற அளவில் தற்போது உள்ள அணி முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது.
தற்போது ஆஸ்திரேலிய அணியிலும் கேப்டன் மாறி இருக்கிறார். வீரர்களும் மாறி இருக்கிறார்கள்.இதனால் இம்முறை இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியா கடுமையாக போராடும். ஆஸ்திரேலியாவின் பரம எதிரி என்றால் விளையாட்டில் அது இங்கிலாந்து தான். அதன் பிறகு தென்னாபிரிக்காவிடம் நாங்கள் கடுமையாக போட்டி போட்டு விளையாடுகிறோம்.
தற்போது இந்தியாவும் அந்த பட்டியலில் இணைந்து இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவை முந்தி தற்போது இந்தியா போட்டிகள் தான் ஆஸ்திரேலியாவுக்கு கடும் சவால்களை கொடுக்கிறது. இந்தியா ஒரு பலமான அணியை நிச்சயம் களம் இறக்கும். ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் உலக சாம்பியன் ஆக இருக்கின்றது. எனவே இந்த தொடர் ரசிகர்களுக்கு நிச்சயம் பொழுதுபோக்கை கொடுக்கும்.