பார்முலா ஒன்: ஹாமில்டனை வீழ்த்தி ‘ரெட்புல்’ வீரர் வெர்ஸ்டாப்பன் சாம்பியன்

பார்முலா ஒன்: ஹாமில்டனை வீழ்த்தி ‘ரெட்புல்’ வீரர் வெர்ஸ்டாப்பன் சாம்பியன்

பார்முலா ஒன் கார் பந்தயம் பல சுற்றுகளாக வெவ்வேறு நாடுகளில் நடைபெறும். நேற்று அபு தாபியில் கடைசி சுற்று பந்தயம் நடைபெற்றது. இதற்கு முன் நடைபெற்ற சுற்றுகள் முடிவில் மெர்சிடெஸ் வீரர் லீவிஸ் ஹாமில்டன், ரெட்புல் வீரர் வெர்ஸ்டாப்பன் சம புள்ளிகள் பெற்றிருந்தனர். இதனால் அபு தாபி கிராண்ட் பிரீயில் வெற்றி பெறுபவர் சாம்பியன் பட்டத்தை வெல்லும் நிலை இருந்தது.

போட்டி தொடங்கியதில் இருந்து இருவருடைய கார்களும் சீறிப்பாய்ந்தன. இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வேகத்தை அதிகரித்தனர். இதனால் சமமான நிலையிலேயே இருவரும் வந்து கொண்டிருந்தனர். இருந்தாலும் இறுதிச் சுற்றில் ரெட் புல் வீரர் வெர்ஸ்டாப்பன், ஹாமில்டனை விட 2.256 வினாடிகள் முன்னதாக பந்தய தூரத்தை அடைந்து வெற்றி பெற்றார்.

இதனால் வெர்ஸ்டாப்படனுக்கு 26 புள்ளிகள் கிடைத்தன. ஹாமில்டனுக்கு 18 புள்ளிகள் கிடைத்தன. ஒட்டுமொத்தமாக 395.5 புள்ளிகள் பெற்று வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்றார்.

போட்டியில் கடைசி நான்கு ரவுண்டுகள் இருக்கும்போது, இருவரின் கார் விபத்திற்குள்ளானது. இந்த நேரத்தில், வெர்ஸ்டாப்பனுக்கு டயரை மாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதனால்தான் வெர்ஸ்டாப்படன் வெற்றி பெற்றார் என மெர்சிடெஸ் புகார் அளித்தது. இருந்தாலும் மெர்சிடெஸ் புகார் நிராகரிக்கப்பட்டது.