பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான கராச்சி மைதானத்தில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் பாவாட் அலாம் தன்னுடைய மூன்றாவது சதத்தை பதிவு செய்தார் .
2009ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்ட பாவாட் அலாம் கடந்த 10 ஆண்டுகளாக பாகிஸ்தான் தேர்வாளர்களால் அணியில் இடம் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டே வந்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அலாம் நியூசிலாந்தில் வைத்து அற்புதமான டெஸ்ட் சதம் ஒன்றை பெற்றிருந்தார், அதனைத் தொடர்ந்து கராச்சியில் வைத்து நேற்றைய நாளிலும் ஒரு டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார் .
கடந்த 5 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 3 சதம் பெற்றுள்ள அலாம், 35 வயதிலும் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகின்றார் .
இதன் அடிப்படையிலேயே குறித்த கேள்வியை சோயிப் அக்தார் எழுப்பியுள்ளார் .
கடந்த 10 ஆண்டுகளாக ஒரு திறமையான வீரரை அணிக்கு தேர்வு செய்ய முடியாது போனமைக்கு யார் பதில் அளிப்பது என்பதே அக்தரின் நியாயமான கேள்வியாக இருக்கிறது .
கேள்வியில் நியாயம் நிறைந்திருக்கின்றது .