சர்வதேச கிரிக்கெட் பேரவை கடந்த தசாப்தத்தின் திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களது திறமையின் அடிப்படையில் விருதுகளை அறிவித்திருக்கின்றது.
அறிவிக்கப்பட்டிருக்கின்ற டெஸ்ட், ஒருநாள் , மற்றும் T20 போட்டிகளுக்கான உலக அணிகளின் பட்டியலில் எந்தவொரு பாகிஸ்தான் வீரரும் இடம்பெற்றிருக்கவில்லை,
என்னைப்பொறுத்தவரையில் கடந்த தசாப்தத்தின் வாய்ப்புக்கள் வழங்காது மறுக்கப்பட்ட மாபெரும் திறமைசாலி யார் என்று கேட்டால் தயங்காமல் இந்த பாவாட் அலாமை கைகாட்டலாம்.
அப்படியொரு அதிசய திமைசாலி.இப்போது கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் வீரர்களில் முதல்தர போட்டிகளில் அதிக சராசரியைப் பேணிக்கொண்டிருக்கும் சர்வதேச வீரர்களில் சிறந்த சராசரியைக் கொண்டிருக்கும் வீரர்களாக ஸ்மித், ஹனுமா விஹாரியைத் தொடர்ந்து இந்த பாவட் அலாம் தான் இருக்கின்றார்.
*30 க்குள் மேற்பட்ட போட்டிகள் விளையாடியோர் மட்டுமே கணக்கில் உள்ளனர்
பத்தும் நிஸ்ஸங்க
(இலங்கை வீரர்- சர்வதேச அறிமுகம் இல்லை)
33 போட்டிகள் 59 இன்னிங்ஸ் 3445 ஓட்டங்கள் 67.54 சராசரி 13 சதம் 13 அரைசதம்
SPD ஸ்மித்
133 போட்டிகள் 232 இன்னிங்ஸ் 11717 ஓட்டங்கள்
57.15 சராசரி 42 சதம் 49 அரைச்சதம்
ஹனுமா விஹாரி
89 போட்டிகள் 142 இன்னிக்ஸ்
7067 ஓட்டங்கள் 56.99 சராசரி
21 சதம் 36 அரைச்சதம்
பாவாட் அலாம்
173 போட்டிகள் 271 இன்னிங்ஸ்
12835 ஓட்டங்கள் 56.54 சராசரி
37 சதம் 61 அரைச்சதம்
உன்னால முடியாதுன்னு யாராவது சொன்னா நீ நம்பவேண்டியது அவங்களையல்ல, உன்னை மட்டுமே.
இது பாவாட் அலாமுக்கும் நன்றாகவே பொருந்தும்.
பாகிஸ்தான் அணியின் போராட்ட குணம் கொண்ட ஒரு வீரன் பாவாட் அலாம். உண்மையில் பாவாட் அலாம் ஒரு பாவமான அலாம் என்றாலும் நன்றாகப் பொருந்தும்.
வாழ்க்கை எவ்வளவு வேடிக்கையும், வினோதங்களும் நிறைந்தது என்பதற்கு இவர் போன்ற வீரர்கள் சான்று பகர்கின்றனர்.நான் மேல குறிப்பிட்ட சராசரியைக் கொண்டு ஆக்டிவ் பிளையாராக இப்போதும் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த ஒருவனை பாகிஸ்தான் ஏன் புறம்தள்ளியது என்று நீங்கள் கேட்கலாம்.
அதுதான் பாகிஸ்தான்.
உனக்குள்ளே மிருகம் தூங்கிவிட நினைக்கும்
எழுந்து அது நடந்தால் எரிமலைகள் வெடிக்கும் எனும் வரிகள் பாவாட் அலாமூக்கு நன்றாகவே பொருந்திநிற்கின்றன.
பாவாட் அலாமுக்குள்ளும் எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்த கிரிக்கெட் ஆற்றல் இன்று எரிமலையாய் எகிறி வெடித்திருக்கின்றது.
அதுவும் நியூசிலாந்து மண்ணில்
டெஸ்ட் கிரிக்கெட் என்பது ஏன் ரியல் கிரிக்கெட் எண்டெர்டெயின்மென்டாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது என்றால் அதற்கு இந்தியா அவுஸ்திரேலியாவில் நேற்றும், பாகிஸ்தான் இன்று நியூசிலாந்தில் ஆடிய ஆட்டங்கள் சான்று என்பேன்.
5 ம் நாளில் அதுவும் இறுதி மணிநேரத்தில் வீரர்கள் முகத்தில் முட்டும் தூரம் போன்று சுற்றி வளைத்து முட்டி மோத நிற்க, அந்த இறுதி மணி நேரத்தையும், அன்றைக்கான ஓவர்களையும் முடித்துவிட முனையும் போட்டிகள் கிடைத்தால் கிரிக்கெட் விரும்பிகளுக்கு அது பெரும்போதே.
இப்படியான போதையை தோற்றுவிக்கத்தக்கவல்ல ஆட்டம் ஒன்றுக்கு அணியைக் கொண்டுவந்த பெருமை பாவாட் அலாமுக்கு இன்று இருந்தது.
இதேபோன்றொரு போட்டி இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் 2014 ம் ஆண்டு இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது என்பதும் நினைவு மீட்க்கத்தக்கது..
மொயின் அலியும், அன்டேர்சனும் நின்று நிலைத்து போட்டியை வெற்றி தோல்வியற்றதாக முடிவுக்கு கொண்டுவர கிட்டத்தட்ட 20 ஓவர்கள் விளையாடிவிட்டு, போட்டி நிறைவுக்குவர 2 பந்து மீதமிருக்க ஆண்டர்சன் சமிந்த இரங்கவின் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதற்கு பின்னர் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடிய இன்றைய போட்டி அதே அனுபவத்தை நமக்கு இரைமீட்டியது.
பாவாட் அலாம் 2.0
2009 ம் ஆண்டு இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் அறிமுகம் மேற்கொள்கின்றார். ஒரு அற்புதமான மத்திய வரிசை வீரர், ஆனாலும் அப்போது அணியில் இடம்பிடித்திருந்த யூனுஸ் கான், மொஹமட் யூசுப், மிஸ்பா , சோயிப் மாலிக் ஆகியோர் மத்திய வரிசையில் இருந்த காரணத்தால் ஆரம்ப வீரர்க விளையாடினார்.
அறிமுக போட்டியின் 2 ம் இன்னிங்சில் அற்புதமான 168 ஓட்டங்களைக் குவித்தார்.
இலங்கையுடனான அடுத்த டெஸ்ட்டில் 16 +16 என்று 32 ஓட்டங்களை சேர்த்தார். அதன்பின்னர் நியூசிலாந்தில் அதே ஆண்டில் இடம்பெற்ற டெஸ்ட்டில் 29 +5 என்று 34 ஓட்டங்களை சேர்த்தார்.
3 டெஸ்ட் போட்டிகளில் 250 ஓட்டங்கள் குவித்திருந்த இந்த பாவப்பட்ட பாவாட் அலாமை அதன்பான்்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் கண்டுகொள்ளவேயில்லை என்பதுதான் வேதனையானது.
மீண்டும் தேசிய குழாமுக்கு அழைக்கப்படும் வரை அலாம் தொடர்ந்து பாகிஸ்தான் தேர்வாளர்களை தூங்க விடாது அலாரம் அடித்துக் கொண்டே இருந்தார்.
இன்னிங்ஸ்-164
ஓட்டங்கள்-7922
சதம்-26
அரைச்சதம்-33
சராசரி-56 .58
இப்படியெல்லாம் பிரகாசித்த ஒருவரை பாகிஸ்தான் ஒதுக்கி வைத்திருந்தது கடந்த தசாப்தத்தின் பாகிஸ்தான் செய்த மிகப்பெரிய துரோகம் என்பேன்.
இறுதியாக UAE யில் இலங்கை அணிக்கெதிரான டிசம்பரில் 2019 இடம்பெற்ற போட்டிகளில் அணிக்கு அழைக்கப்பட்டாலும் விளையாடும் வாய்ப்பு கிட்டவில்லை. மிஷ்பா உல் கக் தலைமை தேர்வாளராக இருந்தபோது அந்த அதிசயம் நடந்தது.
அதன்பின்னர் நீண்ட கால காத்திருப்புக்கு பின்னர் இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் விளையாட வந்து டக் அவுட்டாகி ஏமாற்றினார்.
10 வருடம் 259 நாட்களுக்கு பின்னர் அணிக்கு திரும்பினார். அந்த காலப்பகுதியில் பாகிஸ்தான் 88 டெஸ்ட் போட்டிகளை விளையாடியிருந்தது என்றால் பாருங்களேன் .
ஆயினும் இங்கிலாந்தில் அடுத்த டெஸ்ட்டிலும் வாய்ப்பு 21 +0* என்று மொத்தமாக 21 ஓட்டங்களை பெற்றார்.
இப்போது நியூசிலாந்து சென்றிருக்கும் அணியில் பாபர் அசாம் இல்லாமையால் அணியில் வாய்ப்பு கிடைத்தாலும் முதல் இன்னிங்கிஸில் ஏமாற்றகரமான 9 ஓட்டங்கள் மட்டுமே.
அவருக்கான இறுதி இன்னிங்ஸ்சாகவும் இறுதி வாய்ப்பாகவும் கூட இன்றைய இன்னிக்ஸ் இருந்திருக்கலாம், கெட்டியாக பிடித்து சதமடித்து நம்பிக்கையை தூவி எறிந்திருக்கிறார்.
முதல் சத்த்துக்கும் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்துக்கு இடையில் பாவாட் அலாம் உள்ளூர் போட்டிகளில் மொத்தமாக 30 சதங்களை விளாசித் தள்ளினார்.சராசரி 56 என்பது ஆச்சரியம்தான்.
யூனுஸ் கான், மிஷ்பா ஆகியோருக்கு பின்னர் அந்த மத்திய வரிசையை ஆசாத் சபிக், அசார் அலி ஆகியோர் பிடித்துக் கொண்டனர்.
இப்போதும் அலாமுக்கு கடுமையான போட்டி நிலவுகின்றது, அடுத்து அணித்தலைவர் பாபர் அசாம் திரும்பினாள் ஹரிஸ் சோஹைலுடன் தன் இடத்துக்கு போராட வேண்டும்.
ஒருவேளை மீண்டும் ஆசாத் சபிக் அணிக்குள் திரும்பினால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.
போராடிப் போராடியே தோற்றுபோகமால் திரும்ப திரும்ப எழுந்து வீறுநடை போடும் பாவாட் அலாமூக்கு இப்போது வயது 34 .
இந்தியாவின் டெஸ்ட் அணியில் விருத்திமான் சஹா விற்கும் பான்டுக்கும் இடையில் போட்டி நிலமை வந்த போது ரித்திமான் சாஹாவின் வயது 36 என்பதையும் காரணம் காட்டி அணியில் இருந்து ஒதுக்குவதை போன்று பாவட் அலாமுக்கும் விரைவில் வரலாம்
அதற்கு இடையில் எவ்வளவு சாதிக்கிறார் என்பதுதான் இப்போதைய கேள்வி
வாழ்க்கை என்பது இப்படித்தான் .
போராடி போராடி தோற்றுப் போகும் பலரைப் பார்த்திருக்கிறோம- தோற்றாலும் வெல்லும் வரை போராட வேண்டும் என்ற வேட்கையோடு துடித்துக்கொண்டிருக்கும் இன்னும் இன்னும் பலரையும் பார்த்து இருக்கின்றோம் !
வாழ்க்கை மிக மோசமானது .
கேவலமான உணர்வுகளை எல்லாம் நமக்கு கொடுக்கவல்லது
உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையும் திறமை என்பதையும் தாண்டி அதிர்ஷ்டம் என்பதும் கூடவே இருக்கவேண்டும்
இருந்தால்தான் இந்த வாழ்க்கையில் நாங்கள் ஜெயிக்கலாம்
ஆனாலும் பாவட் அலாம்
போன்று Give up பண்ணாமல் ஜெயிப்பதற்காக போராடிக் கொண்டே இருக்க வேண்டும்
Credit- தில்லையம்பலம் தரணிதரன் (FB post)
2020 .12.30