புதிய டெஸ்ட் தரவரிசை -சிம்மாசனத்தில் ஏறி உட்கார்ந்த ஜோ ரூட், கோலியை பின்தள்ளிய ரோஹித் ,முழுமையான தரவரிசை ..!

புதிய டெஸ்ட் தரவரிசை -சிம்மாசனத்தில் ஏறி உட்கார்ந்த ஜோ ரூட், கோலியை பின்தள்ளிய ரோஹித் ,முழுமையான தரவரிசை ..!

சர்வதேச கிரிக்கெட் பேரவை டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசையை இன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி எல்லோரும் எதிர்பார்த்தபடி டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசையில் கேன் வில்லியம்சன் பின்தள்ளி இங்கிலாந்து டெஸ்ட் அணித் தலைவர் ஜோ ரூட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

கேன் வில்லியம்சன் இரண்டாவது இடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் மூன்றாவது இடத்திலும், லவுச்சேன் நான்காவது இடத்திலும் காணப்படுகின்றனர்.

ஐந்தாவது இடத்திற்கு ரோகித் சர்மா முன்னகர ,ஆறாவது இடத்திற்கு விராட் கோலி பின்தள்ளப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதல் பத்து இடங்களுக்குள் இருந்த புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரும் பின்தள்ளப்பட்டு உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அன்டேர்சன் ஒரு இடம் முன்னகர்ந்து 5 வது இடத்துக்கு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முழுமையான டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய துடுப்பாட்ட தரவரிசை. ????

டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய பந்துவீச்சு தரவரிசை. ????