தவால் குல்கர்னி ஐபிஎல் 2022 இன் மீதமுள்ள மும்பை இந்தியன்ஸ் முகாமில் சேர உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் மும்பை, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் தற்போது செயல்படாத குஜராத் லயன்ஸ் அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 92 ஐபிஎல் போட்டிகளில் 86 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
6 போட்டிகளில் விளையாடி 6 லும் தோல்வியை தழுவியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு தரமான வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படுகிறார்.
பும்ராவுடன் வேகப்பந்துவீச்சு கூட்டணி அமைப்பதற்கு பொருத்தமானவர் இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறிவருகிறது.
ஆகவே மும்பை மற்றும் புனே மைதானங்களில் எவ்வாறு பந்து வீச வேண்டும் என்று நன்கு அறிந்து ஆற்றலுடைய ஒருவரை ரோகித் சர்மா தேடிக்கொண்டிருக்கிறார்.
அதன் விளைவாகவே தவால் குல்கர்னி அணியில் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.